Para Asian Games: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்.. வெள்ளி பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!
ஆசிய போட்டியை தொடர்ந்து பாரா ஆசிய போட்டியானது சீனாவின் ஹாங்சோவில் அக்டோபர் 22 முதல் 28 வரை நடைபெற்று வருகிறது.
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளி, ராம்சிங் வெண்கலம் பதக்கம் வென்றனர்.
A sensational Double triumph 🤩 for India in the Men's High Jump T63 event of the #AsianParaGames2022 🇮🇳🥇🥈#TOPScheme Athlete Shailesh Kumar soared to GOLD, with Games Record with jump of 1.82m
— SAI Media (@Media_SAI) October 23, 2023
while the indomitable #TOPSCHEME Athlete @189thangavellu clinched SILVER! with his… pic.twitter.com/xS2J9BhS7u
அதேபோல், மகளிருக்கான படகு போட்டியில் பிரச்சி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டு போட்டி:
ஆசிய போட்டியை தொடர்ந்து பாரா ஆசிய போட்டியானது சீனாவின் ஹாங்சோவில் அக்டோபர் 22 முதல் 28 வரை நடைபெற்று வருகிறது. 4வது ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 196 ஆண்கள், 113 பெண்கள் என மொத்தம் 309 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு அதாவது கடைசி பதிப்போடு ஒப்பிடும்போது இந்த பதிப்பில் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் 188 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
சீனாவின் ஹாங்சோவில் அக்டோபர் 22 முதல் 28 வரை நடைபெறும் ஆசிய பாரா கேம்ஸ் 2023 க்கு இந்தியா தனது மிகப்பெரிய அணியை அனுப்பும் .
4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து 196 ஆண்கள், 113 பெண்கள் என மொத்தம் 309 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் கடைசிப் பதிப்போடு ஒப்பிடும் போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் 188 விளையாட்டு வீரர்கள் மூவர்ணக் கொடியைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.
2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கப் பதக்கங்கள், 24 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 33 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 72 பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைத்தது.
It’s the FIRST 🏅 for 🇮🇳, at #AsianParaGames 2022
— SAI Media (@Media_SAI) October 23, 2023
Huge cheers for our #TOPScheme Athlete @ItzPrachi_ 🚣♀️🥈
She's just made history by winning SILVER in the Para Canoeing Women's VL2 event at the #HangzhouAPG2022, clocking time of 1:03.147! 🌟👏
Not only is it a stellar… pic.twitter.com/oLwZB1D97m
இந்தநிலையில், பெண்களுக்கான விஎல் 2 பிரிவில் கேனோயிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவ், 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கான பதக்கம் பட்டியலை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆடவருக்கான உயரம் தாண்டுதல்-T63 இல், ஷைலேஷ் குமார் தங்கமும், மாரியப்பன் தங்கவேலு வெள்ளியும், ராம் சிங் பதியார் வெண்கலமும் வென்று மற்ற நாடுகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினர்.