Manu Bhaker: பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கருக்கு 3வது பதக்கம்? இந்திய ரசிகர்கள் ஆர்வம்!
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் மனு பாக்கர் மூன்றாவது பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி 2024:
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிக பதக்கங்களை வென்று வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முதல் பதக்கத்தை துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வென்றார். அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று(ஜூலை 30) 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி 13வது ஷாட்டில் இந்திய இணை வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இந்த பதக்கத்தை வென்றதன் மூலம் சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் மனு பாக்கர்.
மூன்றாவது பதக்கம் வெல்வாரா மனு பாக்கர்?
இந்நிலையில் மனு பாக்கர் மூன்றாவது பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அதாவது 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி விளையாட உள்ளார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங்குடன் இணைந்து மூன்றாவது பதக்கங்களை வெல்வதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைக்கும்.
பெண்களுக்கான 25மீ பிஸ்டல் போட்டிக்கான அட்டவணை:
பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் பயிற்சி போட்டி: ஆகஸ்ட் 1, மதியம் 12:30
பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் Qualification Precision போட்டி: ஆகஸ்ட் 2, மதியம் 12:30
பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் Qualification Rapid போட்டி: ஆகஸ்ட் 2, மதியம் 3:30
பெண்களுக்கான 25 மீ பிஸ்டல் இறுதிப் போட்டி: ஆகஸ்ட் 2, மதியம் 1:00
மேலும் படிக்க:Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் ஜோடி அசத்தல்
மேலும் படிக்க:Manu Bhaker:பாரீஸ் ஒலிம்பிக்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறை! புது சகாப்தம் படைத்த மனு பாக்கர்!