(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் ஜோடி அசத்தல்
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில், இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் கிடைத்துள்ளது.
இந்தியாவிற்கு 2வது பதக்கம்:
10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தல். ஏற்கனவே ஆடவர் தனிநபர் ஏர்பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தென்கொரியாவின் ஓ யே ஜின் & லீ வான் ஜோ ஜோடியை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றனர். 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் எடிஷனில், இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.
BRONZE 🥉!!🔥🔥🇮🇳🇮🇳
— NRAI (@OfficialNRAI) July 30, 2024
India wins 🥉 in the mixed team 10m air pistol as @realmanubhaker & @Sarabjotsingh30 bt Korea’s Oh Ye Jin & Lee Won Ho 16-10 in the bronze match. Second medal for Manu at the Games. History!#Paris2024 #IndianShooting #TeamIndia pic.twitter.com/5HNJlPwIEl
மனுபாக்கர் படைத்துள்ள புதிய சாதனைகள்:
1. 2004 ஏதென்ஸில் சுமா ஷிரூருக்குப் பிறகு, 20 ஆண்டுகளில் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் இறுதிப் போட்டியில் நுழைந்த முதல் இந்தியப் பெண்
2. ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை
3. ஏர் பிஸ்டலில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர்
4. ஒலிம்பிக் போட்டிகளின் ஒரே பதிப்பில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர்
5. இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்
6. ஒலிம்பிக்கில் அணி பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடுதல் ஜோடி (மனு பாக்கர் & சரப்ஜோத் சிங்)
7. தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர்