Tokyo Paralympics | செய்வதாக சொல்லியிருக்கிறார்.. முதல்வரை சந்தித்த மாரியப்பன் மகிழ்ச்சி..!
பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபொழுது, தன் அருகாமையில் குடியிருக்கும் நபரிடம் பேசுவதை போல் பேசியதாக மாரியப்பன் தங்கவேலு கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு கூறினார். சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பன் தங்கவேலு இன்று சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரை சந்தித்தபின் மாரியப்பன் அளித்த பேட்டியில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நான், ஜப்பானில் தங்கம் வெல்ல முடியாதற்கு காரணம் அங்குள்ள தட்ப வெட்ப நிலையே என்று கூறினார். முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றது மகிழ்ச்சி அளித்ததாகவும், அரசு பணி வழங்க கோரிக்கை வைத்ததை அடுத்து அதற்கு கண்டிப்பாக கணக்கில் கொள்வதாக கூறியிருப்பதாகவும் கூறினார். மேலும், பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபொழுது, தன் அருகாமையில் குடியிருக்கும் நபரிடம் பேசுவதை போல் பேசியதாகவும் பாராட்டியதாகவும் கூறினார்.
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி மாரியப்பன் தங்கவேலு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய சுகாதரத்துறை அமைச்சரை சந்திக்க டெல்லி சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமான நிலையத்தில் மாரியப்பனுக்கு வரவேற்பு அளித்தார். இந்த நிலையில், இன்று சென்னை திரும்பிய அவர், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Tamil Nadu | Mariyappan Thangavelu welcomed at Chennai airport upon return to his native state. He won the Silver medal for India in High Jump (Sport Class T42) at #TokyoParalympics pic.twitter.com/HqiccrClgr
— ANI (@ANI) September 5, 2021
Tamil Nadu CM has given assurance that I will be given a job following my medal-winning performance at Tokyo Paralympics. I hope I get a job: Paralympic Silver medallist Mariyappan Thangavelu pic.twitter.com/AFfC1LG3z2
— ANI (@ANI) September 5, 2021
விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன், “தங்கத்தை இலக்காக கொண்டு சென்றேன். மழைப்பிரச்சனை காரணமாக வெள்ளி வெல்ல முடிந்தது. அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன்” என்று கூறினார். மேலும், குரூப்-1 பிரிவில் அரசுப் பணி வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். மற்ற வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கியது போல் எனக்கும் வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.
பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றதற்காக மாரியப்பனுக்கு தமிழக அரசு ரூபாய் 2 கோடி பரிசாக அறிவித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் மாரியப்பனை பாராட்டினார். இதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனும் மாரியப்பனை தொலைபேசியில் பாராட்டினார்.