Malaysian Open Badminton: மலேசிய ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறி பி.வி.சிந்து அசத்தல் !
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து 19-21,21-9,21-14 என்ற கணக்கில் சைவானை வீழ்த்தியுள்ளார்.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் பிரணாய் மட்டும் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மற்ற வீரர் வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர். இந்தச் சூழலில் நேற்று பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தங்களுடைய முதல் சுற்று போட்டியில் பங்கேற்றனர். அதில் பி.வி.சிந்து தாய்லாந்து நாட்டின் பார்ன்பாவி வாங்கை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து தாய்லாந்து நாட்டின் சைவானை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை சைவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அந்த கேமை அவர் 21-19 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமில் பி.வி.சிந்து சுதாரித்து கொண்டு அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது கேமை பி.வி.சிந்து 21-9 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இதன்காரணமாக இரு வீராங்கனைகளும் தலா 1 ஒரு கேம் வென்று இருந்தனர். ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்க 3வது மற்றும் கடைசி கேம் நடைபெற்றது.
BWF 750 : Malaysia Open
— Sports India (@SportsIndia3) June 30, 2022
PV sindhu beat Phittayaporn Chaiwan (THA) by 19-21 21-9 21-14 and entered Quarterfinal of women Single
Sindhu will face 2nd seeded Tai Tzu in quarter pic.twitter.com/Js6TLBfAhg
அதிலும் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3வது கேமில் பி.வி.சிந்து தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 21-14 என்ற கணக்கில் மூன்றாவது கேமை வென்றார். அத்துடன் 19-21,21-9,21-14 என்ற கணக்கில் சைவானை வீழ்த்தினார். மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பி.வி.சிந்து அசத்தியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் பி.வி.சிந்து இரண்டாம் நிலை வீராங்கனையான தாய் சு யிங்கை எதிர்த்து விளையாட உள்ளார்.
உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து இந்தாண்டு இரண்டு பட்டங்களை மட்டுமே வென்றுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிந்து முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஆகவே மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்