மேலும் அறிய

ஒரே கனா என் வாழ்விலே.. தந்தையின் கனவை நிறைவேற்றிய கல்லூரி மாணவி..!

கரூர் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி செல்சியா, தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

கரூர் அருகே காந்திகிராமத்தில் வசித்துவருபவர் ஜான்பீட்டர். இவர் கடலை மிட்டாய் தொழில் செய்து வருகிறார். அவரது மகள் செல்சியா கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளதால் கிரிக்கெட்டை சொல்லிக் கொடுத்துள்ளார். அதை ஆர்வமாக கற்று இன்று தமிழ்நாட்டில் அணிக்கு தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்  மாவட்டத்துக்கும் பெருமையும் சேர்த்துள்ளார் செல்சியா. 

ஒரே கனா என் வாழ்விலே.. தந்தையின் கனவை நிறைவேற்றிய கல்லூரி மாணவி..!

இவர் கரூர் தாந்தோணி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் B.COM CA மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். செல்சியா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் உட்பட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் கிரிக்கெட் அணிக்காக 20 வீரர்களை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தத் தேர்வில் கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி தேர்வு ஆகியுள்ளதால் அரசு கலைக்கல்லூரி மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழக கிரிக்கெட் இளம் வீராங்கனையான செல்சியா ABP NADU செய்தியாளரிடம் கூறுகையில்: 

ஒரே கனா என் வாழ்விலே.. தந்தையின் கனவை நிறைவேற்றிய கல்லூரி மாணவி..!

என்னுடைய 5 வயது முதலே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். நான் எங்க அப்பாவை பார்த்து தான் இந்த கிரிக்கெட் விளையாட்டை துவங்கினேன்.  அப்பாவிடம் விளையாட கற்றுக்கொண்டேன். எனது அப்பா  நான் சிறு வயதில் இருக்கும் போது தேங்காய் மட்டையால் இடது கை கிரிக்கெட் விளையாடும் பழக்கம் கொண்டவர். இதனால் எனது ஆர்வம் அன்று முதல் துவங்கியது. பள்ளி பருவத்திலும் விளையாடி வந்தேன். அதன் பின்னர் முதலில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் மூலமாக நடைபெற்ற 14 வயது உட்பட்ட பிரிவுகளில் சென்னையில் சேப்பாக்கத்தில் தேர்வு நடைபெற்றது, அப்போட்டியில் கலந்துகொள்ள  வாய்ப்பு வந்த நிலையில் அதற்காக நான் பயிற்சிகளை மேற்கொண்டபோதும்  அந்த வாய்ப்பு கைநழுவி சென்றது. 

ஒரே கனா என் வாழ்விலே.. தந்தையின் கனவை நிறைவேற்றிய கல்லூரி மாணவி..!

இருந்த போதிலும் மனம் தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து அடுத்த கட்டத்தை நான் அடைந்தேன். அதன் தொடர்ச்சியாக  தற்பொழுது 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பெண்கள் அணியில் தேர்வு தேர்வாகி உள்ளதால், தற்போது நான் நெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். 

ஒரே கனா என் வாழ்விலே.. தந்தையின் கனவை நிறைவேற்றிய கல்லூரி மாணவி..!

தமிழ்நாட்டில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து உட்கட்டமைப்புடன் பயிற்சித்தளமாக  அமைக்க வேண்டும் என்றும், கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ஒருவரை பயிற்சியாளராக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இவரது கடின உழைப்பால் கிடைத்த வெற்றியைப் போலவே பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டு தமிழகத்தையும், இந்தியாவையும் விளையாட்டில் சிறந்து விளங்க வைக்க வேண்டுமென்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?

அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா

ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!

ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?

TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!

அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு

Embed widget