ISSF Shooting World Cup 2022: உலகக் கோப்பை ட்ராப் பிரிவு துப்பாக்கிச்சுடுதலில் வெள்ளி வென்ற பிருத்விராஜ் தொண்டைமான் குழு
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் ட்ராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் குழுவினர் வெள்ளி வென்று அசத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ட்ராப் பிரிவு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், விவான் கபூர்,போவ்நீஷ் வெண்டிராட்டா ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் மூன்று பேரும் குழுவாக சிறப்பாக செயல்பட்டு தகுதிச் சுற்றுப் போட்டியில் 2வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
அதன்பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஸ்லோவேனியா அணியை எதிராக களமிறங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஸ்லோவேனியா 6-2 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்றது. இந்தியாவின் பிருத்விராஜ் தொண்டைமான், விவான் கபூர்,போவ்நீஷ் வெண்டிராட்டா வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
Silver medal for India at Changwon Shooting World Cup:
— India_AllSports (@India_AllSports) July 13, 2022
Indian team of Prithviraj Tondaiman, Vivaan Kapoor & Bhowneesh Mendiratta lost to Slovakian trio 2-6 in Gold medal match of Trap Team Men's event.
இதன்மூலம் இந்திய அணி இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் சிவா மற்றும் பாலக் ஜோடி தகுதிச் சுற்றில் 574 புள்ளிகள் பெற்றது. அத்துடன் வெண்கலப் பதக்கத்திற்கான வாய்ப்பை பெற்றது. அதில் இந்திய ஜோடி கஜகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவின் சிவா நர்வால் மற்றும் பாலக் 16-0 என்ற கணக்கில் வென்றனர். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.
To put the icing on the cake,Shiva Narwal & Palak win Bronze medal in 10m Air Pistol Mixed team event of Changwon Shooting World Cup.
— India_AllSports (@India_AllSports) July 13, 2022
They thrashed Kazakh duo 16-0 in Bronze medal match. https://t.co/ylRv7Fd4gk pic.twitter.com/qKFI5eBCgU
10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில் இந்தியாவின் மெஹூலி கோஷ் மற்றும் துஷார் மானே மற்றும் ஹங்கேரியின் பெனி மற்றும் எஸ்டார் இணைக்கு தங்கப்பதக்கத்திற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 17-13 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்றது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்