Rishabh Pant: தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிக்கான சான்றிதழ் பெற்ற ரிஷப் பண்ட்! ரசிகர்கள் உற்சாகம்!
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிக்கான அனுமதிச்சான்றிதழை ரிசப் பண்ட் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் 2024:
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியானது, அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பண்ட் விளையாடுவதை உறுதிபடுத்தினார்.
மீண்டும் வரும் ரிஷப் பண்ட்:
RISHABH PANT DECLARED FULLY FIT BY THE NCA...!!!! (Sports Tak). pic.twitter.com/glXdLBb7jb
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 10, 2024
அதேபோல் இந்த முறை எப்படியும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட வேண்டும் என்று பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் ரிஷப் பண்ட். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதிக்கான அனுமதிச்சான்றிதழை ரிசப் பண்ட் பெற்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலை விபத்திற்கு பின்னர் எப்போது ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று ரசிகர்கள் காத்திருந்த சூழலில் தற்போது அவர் இந்த சான்றிதழை பெற்றிருப்பதால் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார் என்பது உறுதி ஆகியுள்ளது. இச்சூழலில் முழு நேர கிரிக்கெட்டிற்கு திரும்ப உள்ள ரிஷப் பண்டிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?