(Source: ECI/ABP News/ABP Majha)
India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?
இந்திய அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து 4 டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில்இந்தியஅணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்திய அணியின் அறிமுக வீரராக களம் இறங்கிய ஆகாஷ் தீப்பின் பந்தில் பென் டக்கெட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை பதிவு செய்தார் ஆகாஷ் தீப்.
இதனிடையே பொறுமையாக விளையாடி வந்த சாக் கிராலியுடன் ஒல்லி போப் களம் இறங்கினார். ஆனால் ஆகாஷ் தீப் வீசிய பந்திலேயே டக் அவுட் முறையில் வெளியேறினார் ஒல்லி போப். பொறுமையாக விளையாடி வந்த சாக் கிராலி 42 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
சதம் விளாசிய ஜோ ரூட்:
பின்னர் களம் இறங்கிய ஜோ ரூட் அதிரடியாக விளையாடினார்.
England 302/7 on Day 1 Stumps.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2024
What a recovery by England, from 112/5 to 302/7. Joe Root is the superstar of the day with his 31st Test ton. Foakes and Robinson with a great support to him. pic.twitter.com/1cjaCYw7Wt
அவருடன் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இதில் ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க மறுபுறம் சதம் விளாசினார் ஜோ ரூட். அதன்படி, 226 பந்துகளில் 9 பவுண்டரிகளை விளாசி 106 ரன்களை விளாசினார். இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களும், பென் போக்ஸ் 47 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜோ ரூட் மற்றும் ஒல்லி ராபின்சன் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.
இவ்வாறாக இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்களை குவித்துள்ளது. இதில் அறிமுக வீரராக களம் இறங்கிய ஆகாஷ் தீப் 17 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!
மேலும் படிக்க: Ranji Trophy: ரஞ்சி கோப்பை.. 1 கோடி ரூபாய் பரிசு.. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு..