CSK Ipl Auction : மிக்சர் ரெடி.. லிஸ்டும் ரெடி.. சிஎஸ்கேவின் பக்கா ஸ்கெட்ச்
IPL Mega Auction 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மெகா ஏலத்தில் எந்தெடுந்த வீரர்களை எடுக்க வாய்ப்புள்ளது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்
ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் நடைப்பெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெடுந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது என்பதை இந்த செய்தி தொப்பில் காண்போம்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதிஷா பதிரானா, எம்.எஸ் தோனி ஆகிய 5 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தற்போது ஒரு ஆர்டிஎம் உள்ளது. இதை வைத்து டெவன் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரில் யாராவது ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயம் எடுத்துவிடும்.
மிடில் ஆர்டர் தேவை:
சென்னை அணியில் ஷிவம் துபேவுடன் சேர்ந்து மிடில் ஆர்டரில் விளையாட ஒரு திடமான இந்திய மிடில் ஆர்டர் வீரர் தேவைப்படும் நிலையில் சென்னை அணியின் ரேடாரில் ராகுல் திரிபாதி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் உள்ளனர். ராகுல் திரிபாதி ஏற்கெனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளேமிங் மற்றும் தோனியுடன் விளையாடிய அனுபவம் உள்ளதால் அவரை சென்னை அணி எடுக்க வாய்ப்புள்ளது.
Captain 🧢
— Chennai Super Kings (@ChennaiIPL) November 21, 2024
Coach 👨🏫
📍Chennai #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/uLQEr6Zcmn
மஞ்சள் ஜெர்சியில் மேக்ஸ்வெல்?
அடுத்ததாக அதிரடியாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். அதற்காக லியம் லிவிங்ஸ்டன், கிளேன் மேக்ஸ்வெல், நியூசிலாந்து வீரர் கிளேன் பிலிப்ஸ் ஆகிய மூவரில் ஒருவரை சென்னை நிச்சயம் டார்கேட் செய்யும். காரணம் என்னவென்றால் மூவரும் பகுதி நேர சுழ்ல் பந்துவீச்சாளர்கள். சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழ்ல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மூவரில் ஒரு நிச்சயம் சிஎஸ்கே டார்கெட் செய்யும்.
இதையும் படிங்க: Dinesh Karthik : சிஎஸ்கே வீரர்களுக்கு ஸ்கெட்ச்..கட்டம் கட்டும் ஆர்சிபி..DK-வின் மாஸ்டர் பிளான்..
மீண்டும் அஸ்வின்?
ஜடேஜாவுடன் சேர்ந்து சுழல்பந்து வீச ஒரு அனுபவம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்கள் தேவை. அந்த வகையில் ரவி அஷ்வினை மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் ஆட வைக்கும் முயற்சியில் சென்னை அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் முயற்சி எடுக்கும். அதே போல் மகேஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்க, சாண்ட்னர் ஆகியோரை சென்னை தங்கள் லிஸ்ட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடராஜனுக்கு ஸ்கெட்ச்:
அதே போல வேகப்பந்து வீச்சாளர்களில் தமிழக வீரர் நடராஜனை சென்னை அணி எடுப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதே போல் ஷர்துல் தாக்கூர், முஸ்தாபிசுர் ரகுமான், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருக்கு சென்னை அணி நிச்சயம் தங்கள் ஏலத்தில் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட்டு வரும். அதே போல ட்ரெண்ட் போல்ட், முகமது சமி ஆகியோரில் யாரையாவது ஒருவரை எடுக்க சென்னை நிச்சயம் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.