CWG India Hockey : கானா அணிக்கு எதிராக இந்திய ஹாக்கி நட்சத்திரங்கள் புதிய சாதனை...! அப்படி என்ன சாதனை..?
இந்திய ஹாக்கியின் நட்சத்திர வீரர்களான மன்ப்ரீத்சிங்கும், ஹர்மன்பீரித்சிங்கும் கானா அணிக்கு எதிராக புதிய சாதனை படைத்தனர்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி கானா ஆடவர் அணியை துவம்சம் செய்துவிட்டது. இந்த போட்டியில் எதிரணியான கானா அணிக்கு இந்திய அணியினர் எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை. போட்டித் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் ஆட்ட நேர முடிவில் 11-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று அசத்தினர்.
இந்த போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், முன்னணி வீரர் மன்தீப்சிங்கும் புதிய சாதனையை படைத்தனர். அதாவது இந்திய அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமான மன்ப்ரீத்சிங் கானா அணிக்கு எதிரான இன்றைய போட்டி மூலம் சர்வதேச அளவில் 300வது போட்டியில் ஆடும் பெருமையை பெற்றார்.
Congratulating the deserving and outstanding Manpreet Singh on reaching 300 international caps.#IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 pic.twitter.com/ZlNEDKcwAE
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2022
இந்திய அணிக்காக 3 ஒலிம்பிக் போட்டிகளில்ஆடிய பெருமையை பெற்ற மன்ப்ரீத்சிங், இந்திய அணிக்காக ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வாங்கித்தந்த பெருமைக்கு சொந்தக்காரர். தற்போது, மூன்றாவது காமன்வெல்த் கேம்ஸ்களில் ஆடும் மன்ப்ரீத்சிங் 2014ம் ஆண்டு இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றபோது இந்திய அணிக்காக ஆடியவர். இந்திய அணிக்காக 2018ம் ஆணடும், 2014ம் ஆண்டும் உலககோப்பை ஹாக்கியில் ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Our hearty compliments to Harmanpreet Singh on completing 150 international caps.#IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 @CMO_Odisha @IndiaSports @sports_odisha @Media_SAI pic.twitter.com/MUBAcWA5Ru
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2022
இவர் மட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டனாகிய ஹர்மன்பிரீத்கவுரும் இன்றைய போட்டியில் சர்வதேச அரங்கில் தன்னுடைய 150வது போட்டியில் ஆடினார். 2015ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடிய ஹர்மன்பிரீத்சிங் இரு முறை ஒலிம்பிக் போட்டியில் ஆடியவர். கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப்பதக்கம் வெல்ல முக்கிய வீரராக திகழ்ந்தவர். கடந்த 2018ம் ஆண்டு காமன்வெல்த் ஆடிய அனுபவம் உள்ளனர். 2018ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையில் ஆடியவர். ஆசிய கோப்பையிலும், ஜூனியர் உலககோப்பையிலும் ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Chess Olympiad : சுவிட்சர்லாந்து வீரரை வென்ற பிரக்ஞானந்தா...! வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கும் தமிழக வீரர்கள்..!
மேலும் படிக்க : IND vs GHA, Men's Hockey: கோல் மழை பொழிந்த இந்தியா..! கண்ணீர் வடித்த கானா..! 11-0 என்ற கணக்கில் அபார வெற்றி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்