Chess Olympiad : சுவிட்சர்லாந்து வீரரை வென்ற பிரக்ஞானந்தா...! வெற்றி மேல் வெற்றிகளை குவிக்கும் தமிழக வீரர்கள்..!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் யானிக்கை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகின்றனர். இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சுவிட்சர்லாந்து வீரர் யானிக்குடன் மோதினர். இந்த போட்டியில் அவர் கருப்பு நிற காய்களுடன் சுவிட்சர்லாந்து வீரரை எதிர்கொண்டார். 67வது காய் நகர்த்தலில் அவர் சுவிட்சர்லாந்து வீரரை வென்றார்.
6⃣ out of 6⃣ again! 🔥🔥🔥
— Chess.com - India (@chesscom_in) July 31, 2022
All the six Indian teams continued their great run in the third round today!
Congratulations to the 🇮🇳 Indian teams 👏@chennaichess22 @aicfchess #ChessOlympiad pic.twitter.com/ihTYwuDAJm
தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் பி அணி தான் இந்திய அணிகளிலே மிகவும் பலமிகுந்த அணியாக எதிரணியினரால் கருதப்படுகிறது. பிரக்ஞானந்தா தவிர தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை வைஷாலி, இந்திய வீராங்கனை வந்திதா அகர்வால், தமிழக வீரர் சேதுராமன் ஆகியோரும் அசத்தலான வெற்றியை பெற்றனர்.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் சார்பில் ஆடிய அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடினர் என்பது குறிப்பிடத்தக்து.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்