IND vs GHA, Men's Hockey: கோல் மழை பொழிந்த இந்தியா..! கண்ணீர் வடித்த கானா..! 11-0 என்ற கணக்கில் அபார வெற்றி..!
IND vs GHA, Men's Hockey: காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கானா அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இந்தியா அபாரமாக ஆடி வருகிறது. தனிநபர் பிரிவிலும், குழு விளையாட்டிலும் அசத்தி வரும் இந்தியா இன்று ஹாக்கியில் கானா அணியை சிதைத்துவிட்டது என்றே கூறலாம்.
குரூப் பி பிரிவில் இன்று இந்தியாவும், கானாவும் நேருக்கு நேர் மோதின. இதில், போட்டித் தொடங்கியது முதலே இந்திய அணியினர் கானா அணியின் கோல் வலையை முற்றுகையிட்டே இருந்தனர். இந்திய அணியின் ஆதிக்கத்தை தடுக்க முடியாமல் கானா அணியினர் தடுமாறினர்.
GAME OVER! 🏑
— Hockey India (@TheHockeyIndia) July 31, 2022
⚠️ 𝙒𝙖𝙧𝙣𝙞𝙣𝙜: The #MenInBlue are here to WIN!
IND 11:0 GHA #IndiaKaGame #HockeyIndia #B2022 #Birmingham2022 @CMO_Odisha @IndiaSports @sports_odisha @Media_S pic.twitter.com/Jsge9gx56A
போட்டி தொடங்கிய முதல் கால்பாதியிலே இந்திய அணி 3 கோல்களை விளாசியது. அடுத்த பாதியில் இந்திய அணி 2 கோல்களை விளாசியது. இதனால், போட்டித் தொடங்கிய முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கோல்களை விளாசியது. இதனால் இரண்டாம் பாதியில் கோல்களை தடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி கோல் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துடனும் கானா களமிறங்கியது.
ஆனால், அவர்களின் அனைத்து முயற்சிக்கும் இந்திய வீரர்கள் பெரிய அளவில் முட்டுக்கட்டையாகதான் இருந்தனர். போட்டியில் மூன்றாவது காலிறுதிப் பகுதியில் இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குதல் ஆட்டத்தை நடத்தினர். இதனால், அந்த நேரத்தில் மட்டும் இந்தியா 4 கோல்களை விளாசியது. கடைசி காலிறுதிப் பகுதியிலும் இந்தியா 2 கோல்களை விளாசி ஆட்டத்தின் முடிவில் 11-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத்சில் 3 கோல்களை விளாசினார். மன்தீப்சிங், நிலகன்டா ஷர்மா. சாம்ஷெர்சிங், வருண்குமார், அபிஷேக், ஆகாஷ்தீப்சிங் ஆகியோர் தலா 1 கோல்களை விளாசினர். ஜூக்ராஜ் சிங் தலா 2 கோல்களை விளாசினார். குரூப் பி பிரிவில் இடம்பெறுள்ள இந்திய அணி 2 போட்டிகளில் ஆடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கானா அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் 150வது கோலையும், மன்தீப் சிங் 300வது கோலையும் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : CWG Gold : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம்..! பளுதூக்குதலில் இந்திய வீரர் அசத்தல்..!
மேலும் படிக்க : CWG 2022 Weightlifting: காமன்வெல்த் 2022 போட்டியில் சாதனையுடன் இந்தியாவிற்கு முதல் தங்கம் வென்ற மீராபாய் சானு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்