Ind vs SL 3rd T20I: ‛சதம்’ கூட எடுக்காமல் ‛கதம்’ ஆன இந்தியா: திணறி திணறி 81 ரன்கள் சேர்த்தது!
இறுதியில், தாக்குப்பிடித்து நின்ற இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில், மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஷிகர்தவாண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில், நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகள் களமிறங்கியுள்ளன.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான், ரூத்துராஜ் சொதப்பலாக ஆடினர். வந்த வேகத்தில், கோல்டன் டக்-அவுட்டாகி தவான் பெவிலியன் திரும்ப, அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் அவுட்டாகினர்.
தவான், ரூத்துராஜ் ஆகியோரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, படிக்கல் என பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்காமல் சொதப்பினர். இதனால், மடமடவென சரிந்த டாப்-ஆர்டரால் அடுத்து களமிறங்கிய மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்து ரன் எடுப்பது சவாலாக இருந்தது.
Wanindu Hasaranga's twin strikes has the visitors reeling!
— ICC (@ICC) July 29, 2021
🇮🇳 are 29/4 after 6 overs. #SLvIND | https://t.co/mYciWl62Z7 pic.twitter.com/djOl5ixWRN
இலங்கை அணி பெளலர்களை பொருத்தவரை, ஹசராங்கா 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்ட இலங்கை அணி, இந்த போட்டியில் பர்ஃபெக்டான கேட்சுகள், பொறுப்பான ஃபீல்டிங் ஆகியவற்றை முதல் இன்னிங்ஸில் அசத்தினர். இதனால், 20 ஓவர்களை முழுமையாக ஆடுமா என்ற சந்தேகத்தில் இந்திய அணி திணறியது. இறுதியில், தாக்குப்பிடித்து நின்ற இந்திய அணி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில், மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இந்திய அணி.
A 🔥 performance from Sri Lanka in the field restricts India to 81/8.
— ICC (@ICC) July 29, 2021
Birthday boy Wanindu Hasaranga ends up with figures of 4/9 in his four overs 👏#SLvIND | https://t.co/mYciWl62Z7 pic.twitter.com/k0C5uEUAr0
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கும் இலங்கை அணியை, இந்திய அணியின் பெளலிங் சுருட்டுமா என்பது அடுத்த இன்னிங்ஸில். ஆனால், இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடிய கடந்த 11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கிலும், மேற்கிந்தீய தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில், போட்டியை வென்று தொடரைப் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி விளையாடும் என்பது தெரிகிறது.