Ind vs Eng 2nd Test: இந்தியாவின் ரன் வேட்டைக்கு ‘ஸ்பீட் ப்ரேக்கர்’: ராகுல், ரஹானே அவுட்!
இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராகுல், ரஹானே அடுத்தடுத்து விக்கெட் கொடுத்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மதியம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்த காரணத்தாலும், வானிலை மந்தமாக இருப்பதாலும் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்று ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ் போட்ட சிறிது நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தொடங்க தாமதமானது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. ராகுல் (127*) மற்றும் ரஹானே (1*) ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராகுல், ரஹானே அடுத்தடுத்து விக்கெட் கொடுத்து பெவிலியன் திரும்பியுள்ளனர்.
TN Budget Highlights: தமிழ்நாடு பட்ஜெட்டின் முத்தான முக்கிய அறிவிப்புகள்....!
Overnight centurion KL Rahul holds out to covers, putting an end to his knock!
— OneCricket (@OneCricketApp) August 13, 2021
Ollie Robinson with another crucial wicket!
Low on confidence, Ajinkya Rahane departs soon after!
England making inroads!
IND - 283/5#ENGvIND #Rahane #KLRahul pic.twitter.com/6HY5akNO0Z
ராபின்சன் பந்துவீச்சில் ராகுலும், ஆண்டர்சன் பந்துவீச்சில் ரஹானேவும் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். இரு விக்கெட்டுகளின் கேட்சுகளையும் கேப்டன் ஜோ ரூட் பிடித்துள்ளார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை எடுக்க திணறிய இங்கிலாந்து பெளலர்கள், இன்று வந்தவுடனே இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கின்றனர்.
முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தில் 238 பந்துகளை எதிர்கொண்ட ராகுல், 1 சிக்சர் 11 பவுண்டரிகள் உட்பட127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். 2015-ம் ஆண்டில் இருந்து ஆசியாவுக்கு வெளியே விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு ஓப்பனிங் களமிறங்குபவர்களால் 4 செஞ்சுரிகள் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு செஞ்சுரிகளுமே ராகுல் அடித்தது. இரண்டு முறை இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தலா ஒரு முறையும் செஞ்சுரி அடித்துள்ளார். நேற்றைய போட்டியில் செஞ்சுரி அடித்ததால், 2021-22 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சதம் அடித்த முதல் வீரரானார். மேலும், வினு மங்கட், ரவி சாஸ்திரி ஆகியோரைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் செஞ்சுரி அடித்த மூன்றாவது ஓப்பனிங் பேட்ஸ்மேனானார். இதனால், லார்ட்ஸ் ஹானர் போர்டில் ராகுலின் பெயர் பொறிக்கப்பட உள்ளது.