TN Budget 2021 Live Updates: வெளிநடப்பு... விறுவிறுப்பு... சுறுசுறுப்பு... எப்படி இருந்தது முதல்வர் ஸ்டாலினின் முதல் பட்ஜெட்?
Tamil Nadu Budget 2021-22 Live Updates: திமுக அரசு பொறுப்பேற்று முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பான அனைத்து அப்டேட்களும் இந்த லைப் பிளாக் மூலம் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Background
Tamil Nadu Budget 2021-22 DMK: தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக, இன்று பட்ஜெட் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட், ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி நான்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகள் வளமாக வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்தார்.தேனி மாவட்டம் வைகை அணையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விவசாயிகளின் நலன்களை பேணுவதில் அரசு எப்போதும் முழு முயற்சியுடன் ஈடுபடும் என்று குறிப்பிட்டார்.
காலை 5 மணியிலிருந்து பட்ஜெட் தொடர்பான முழு விபரங்களை ABP நாடு இணையத்தை பின்தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மணி நேர அறிவிப்புக்கு பின் நிறைவு பெற்றது பட்ஜெட்!
தமிழ்நாட்டின் பொது பட்ஜெட் சுமார் 3 மணி நேரம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு சலுகைகளும், திட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பெட்ரோல் விலை வரி குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தது. பட்ஜெட் துவங்கியது முதல் தற்போது வரையிலான அனைத்து அப்பேட்களும் கீழே உள்ளன. அவற்றை பார்த்து அறிந்து கொள்ளவும்.
பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம்
மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறை தலைவருக்கு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
வரி ஏய்ப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்
வரி ஏய்ப்பு செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு
கடந்த ஆட்சியில் 60 ஆயிரம் கோடி இழப்பு -பிடிஆர்
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டியுள்ளதாக நிதியமைச்சர் அறிவிப்பு
நடப்பாண்டு நிதி பற்றாக்குறை எவ்வளவு
தமிழ்நாட்டின் நடப்பாண்டு நிதிபற்றாக்குறையாக ரூ.92529.43 இருக்கும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு