மேலும் அறிய
Advertisement
TN Budget Highlights: தமிழ்நாடு பட்ஜெட்டின் முத்தான முக்கிய அறிவிப்புகள்....!
TN Budget Highlights: 2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதன்முறையாக அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்
- சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் ஆனது தற்போது தாக்கல் செய்யப்படுகிறது
- நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய எழுந்தபோது அதிமுகர் உறுப்பினர்கள் பேச வாய்ப்பளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
- இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு - என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசத் தொடங்கினார்.
- இந்த திருத்திய வரவு செயலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும்.
- பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது
- அரசின் கடன் சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று; தேர்தல் வக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும்.
- பல்வேறு தேசிய அளவிலான நிகழ்வுகளால் தமிழகத்தின் நிதிமேலாண்மை பாதிக்கப்பட்டு இருப்பதை வெள்ளை அறிக்கை நிரூபித்தது; தற்போது அமைக்கப்பட்டுள்ள 15ஆவது நிதிக்கு, சரக்கு மற்றும் சேவை வரி, ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பயன்பாடு ஆகியவை மாநிலங்களுக்கு உரிய நிதியை திசை திருப்பி விடுகின்றன
- கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதை வெள்ளை அறிக்கை காட்டி இருக்கிறது
- பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கடுமையாக சரிந்துள்ளது, நுகர்வோர்களுக்கு நியாமான பங்கை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது
- கருவூல அமைப்புகளுக்கு வெளியே உள்ள வங்கி கணக்குகளுக்கு அரசின் நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாக பல்வேறு தரவுகள் சுட்டிக்காடுகின்றன; இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அத்தகைய நிதிகளை கண்டறிய இரட்டை கணக்கெடுப்பு முறை தொடங்கப்பட்டது.
- அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும் இந்த நிதியை கண்டறிவதற்கான ஆய்வில் கணிசமான நிதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; மேற்கூரிய கணக்குகளை முழுமையாக சரி செய்யவும், பயன்படுத்த முடியாத மற்றும் பயன்படுத்தக்கூடிய நிதியை கண்டறிய நிதித்துறை மூத்த அதிகாரியின் கீழ் சிறப்பு குழு அமைக்கப்படும்; அனைத்து அரசின் நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும்.
- அனைத்து அரசுத்துறைகளில் உள்ள தணிக்கை துறைகள் அனைத்தும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு மேம்படுத்தப்படும்.
- பல்வேறு வழிகளில் நாடு முழுவதும் சட்டமன்றங்களின் வலுவான போக்கு பங்கு தற்போது குறைந்துள்ள போக்கு காணப்படுகிறது.
- சட்டமன்றத்தில் 1921ஆம் ஆண்டில் இருந்து இருக்கும் ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும்.
- தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாடுத்துறை
- சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்
- 2010 முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் நாள் ரூபாய் 10 லட்சத்துடன் வழங்கப்படும்
- அனைத்துதுறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்; யூனிக்கோடு எழுத்துரு அனைத்து அரசு அலுவலங்களிலும் பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்படும்.
- கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க 5 கோடி நிதி ஒதுக்கீடு
- நீர்வளத்துறை
- மேட்டூர், அமராவதி, வைகை, பேச்சுப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளில் நீத்தேக்க கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை
- ஆனைமலையாறு, நீராறு -நல்லாறு, பாண்டியாறு-புண்ணம்புழா உள்ளிட்ட நதிநீர் திட்டத்தை செயல்படுத்த கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
- ஆளில்லா விமானங்கள், ஜிபிஎஸ், ஜிஐஎஸ் தொழில்நுட்பம் கொண்டு நீர்வளத்துறை மேம்படுத்தப்படும்.
- மீன்வளம்
- கடற்பாசி வளர்ப்பு, மீன்வளர்ப்பு, கடற்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட மாற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்
- புதியதாக 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படும்
- சென்னை காசிமேடு துறைமுகம் 160 கோடி செலவில் மேம்படுத்தப்படும்
- 1149.79 கோடி ரூபாய் மீன்வளத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம்
- தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 33 சதவீத நிலப்பரப்பை காடுகளாக மாற்ற தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் நடவடிக்கை
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவது தமிழ்நாடு போன்ற கடலோர மாநிலங்களுக்கு பெரும் சவால்
- முதல்வரின் தலைமையின் கீழ் 500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்படும்
- சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெறுவதற்காக 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வசிக்கும் நகரங்களிலும் காற்று தரத்தினை நிகழ்நேரத்தில் கணிக்கும் மையம் அமைக்கப்படும்
- 150 கோடி செலவில் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் முதல்வர் தலைமையில் அமைக்கப்படும்.
- பொதுப்பணித்துறை
- கட்டுமானத்திற்கான திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி, கண்காணிப்பு, பட்டியலிடும் நடைமுறைகள் அனைத்தும் மின்னனுமயமாக்கப்படும்.
- ஊரக வளர்ச்சி
- 79,395 குக்கிராமங்களிலும் தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்
- கிராமப்புறங்களில் 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்
- தற்போது வீட்டுக்குடிநீர் இணைப்பு இல்லாத 83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச் இறுதிக்குள் குடிநீர் இணைப்பு வசதி
- 2000 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்
- கிராமங்களில் உள்ள 8 லட்சத்து 3ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கப்படும்
- வீட்டிற்கான அரசுமானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி 3 கோடி ரூபாயாக உயர்வு
- 1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மீண்டும் தொடங்கப்படும்
- முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய திட்டமான நமக்கு நாமே திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு 100 கோடி நிதி ஒதுக்கீடு.
- நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை
- அனைத்து மாநகராட்சிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர், நகராட்சிகளில் நபருக்கு 90 லிட்டர் பேரூராட்சிகளில் 70 லிட்டர் குடிநீர் வழங்குதல் உறுதி செய்யப்படும்
- நகர்புறங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை முற்றிலும் தவிர்க்கப்படும்
- ஒரு லட்சத்திற்கும் அதிக மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
- கழிவுநீர் பராமரிப்பு அனைத்தும் இயந்திரமயமாக்கப்படும்
- நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்
- அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் மின்விளக்குகள் அமைக்கப்படும்
- திருச்சியில் நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.
- நகரமயமக்களை சீரமைக்க மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரில் பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்படும்
- நகர்புற ஏழைகளுக்கான மொத்த வீட்டு வசதி தேவை 9.53 லட்சம் வீடுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு 3954.4 கோடி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலைத்துறை
- நாட்டிலேயே அதிக அளவிலான தார்சாலைகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன
- அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க கூடிய 2200 கி.மீ சாலைகளை 4 வழி சாலைகளாகவும், வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6700 கி.மீ சாலைகள் இரட்டை வழி சாலைகளாகம் மேம்படுத்தப்படும்
- புறவழி சாலை இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழி சாலை அமைக்கப்படும்
- சென்னை-கன்னியாகுமரி இடையிலான கிராண்ட் ட்ரங்க் சவுத் சாலை மாநில பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாக உள்ளது.
- கிராண்ட் ட்ரங்க் சவுத் சாலையை 6 மற்றும் 8 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
- போக்குவரத்துத்துறை
- அரசுப்பேருந்துகளில் 2010-11இல் 28.36 லட்சமாக இருந்த பயணிகளின் எண்ணிக்கை 2019-20இல் கோவிட் தொற்றுக்கு முன்னரே குறைந்துவிட்டது
- கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையேயேன மெட்ரோ ரயில் பணிகள் 4 ஆண்டுகளுக்குள் தொடங்கும்
- விமானநிலையம்- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிக்கப்படும்
- மதுரையில் மெட்ரோ ரயில்திட்டத்தை அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
- மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை
- தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 32,646 மெகாவாட்
- 2500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் இருந்தே அரசு வாங்குகிறது
- தமிழ்நாடு அரசு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது
- பள்ளிக்கல்வித்துறை
- தமிழ்நாட்டுக்கு என தனி மாநில கல்விக்கொள்கை வகுக்கப்படும்
- 32,599.56 கோடி பள்ளிக்கல்வித்துறைக்காக ஒதுக்கீடு
- பள்ளிகளில் இடைநின்றலை குறைக்க நடவடிக்கை
- பள்ளிகளில் 100% மாணவர் சேர்க்கையை நடத்த நடவடிக்கை
- மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்
- மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து விலகி சிந்திக்கும் முறையை ஊக்குவிக்க வேண்டும்
- 2025ஆம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம் செயல்படுத்தப்படும்.
- உயர்கல்வித்துறை
- உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது
- இந்தாண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
- ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்
- வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழில் நிறுவனங்கள் உடன் ஆலோசித்து பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்படும்
- 25 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
- 4 அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் விடுதிகள் கட்டப்படும்
- ஆளில்லா விமான கழகம் என்ற புதிய நிறுவனம் அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைந்து தொடங்கப்படும்
- உயர்கல்விக்காக 5369.09 கோடி ஒதுக்கீடு.
- மருத்துவம் மற்றும் குடும்ப நலன்
- 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303ஆக உயர்த்தப்படும்
- முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு 1046 கோடி ஒதுக்கீடு
- 116.46 கோடியில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும்
- 2 கோடியில் தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் தொடங்கப்படும்
- 18,933.20 கோடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கீடு.
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு
- அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியத்திற்காக 215.64 கோடி
- கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயல்பாடு புதுப்பிக்கப்படும்
- நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழில் பயிற்சி நிலையம் நெய்வேலியில் அமைக்கப்படும்
- திறன்மேம்பாட்டுக்கழகத்தின் மானியமாக 200 கோடி ஒதுக்கீடு
- தொழில்துறை
- இந்திய அளவில் தொழில்துறையை 3ஆவது இடத்திற்கு கொண்டு வர நடவடிக்கை
- உயிரியல் அறிவியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்திக்கு புதிய தொழிற்கொள்கை வெளியிடப்படும்
- பின் தங்கிய மாவட்டங்களில் 45ஆயிரம் ஏக்கர் நில வங்கி தொகுப்பு ஏற்படுத்தப்படும்
- தூத்துக்குடியில் 4500 கோடி முதலீட்டை ஈர்க்க 1100 ஏக்கரில் 1000 கோடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்
- திருவள்ளூரில் மின்வாகன பூங்கா
- காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா
- ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்கா
- மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் 3 உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்
- நிதிநுட்ப கொள்கை வெளியிடப்படும்
- நந்தம்பாக்கத்தில் 165 கோடியில் நிதிநுட்ப பூங்கா அமைக்கப்படும்
- விழுப்புரத்தில் உள்ள திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும்
- கோவையில் 500 ஏக்கரில் 225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா அமைக்கப்படும்
- திருவண்ணாமலை, தருமபுரி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி, நாகை மாவட்டங்களில் புதிய சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்
- குறு,சிறு,நடுத்தர நிறுவனங்களுக்கு மாநில அளவிலான கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும்
- 62 தொழிற்பேட்டைகளில் உள்ள 9,264 மணைகளுக்கு பட்டா வழங்கப்படும்
- தொழிலாளர்களுக்கு மலிவு வாடகையில் சென்னை, கோவையில் குடியிருப்பு ஏற்படுத்தப்படும்.
- கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்
- கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறையில் ஏற்படும் வருவாய் இழப்பை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
- பசுமை சுரங்க மேல்வரி விதிக்கப்பட்டும்
- அரியலூர், பெரம்பலூரில் புதைவியல் புதைபடிவு பூங்கா 10 கோடியில் அமைக்கப்படும்
- கைத்தறி மற்றும் துணிநூல்துறை
- 2021-22ஆம் ஆண்டில் 490.27 கோடியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தபப்டும்
- இலவச பள்ளி சீருடைகள் வழங்கும் திட்டத்திற்கு 409.30 கோடி ஒதுக்கீடு
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஈரோடு, நாமக்கல்லில் அமைக்கப்படும்
- திருப்பூர், காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் துணிநூல் பூங்கா பணிகள் முடிக்கப்படும்
- துணிநூல் துறையில் கவனம் செலுத்த தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்.
- தகவல் தொழில்நுட்பத்துறை
- டிசம்பருக்குள் 600க்கும் மேற்பட்ட சேவைகள் மின்னணு முறையில் வழங்கப்படும்
- ஊராட்சி அமைப்புகளுக்கு அகண்ட அலைவரிசை இணைப்பு கொடுக்கப்படும்
- 12525 கிராமங்களுக்கு கண்ணாடி இழை வடம் மூலம் இணைய சேவை.
- இந்து சமய அறநிலையத்துறை
- இந்தாண்டில் 100 கோயில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தவனத்தை சீரமைக்கும் பணிகள் 100 கோடியில் மேற்கொள்ளப்படும்
- திருக்கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்
- 12959 திருக்கோயில்களில் ஒருகால பூசை திட்டத்தை செயல்படுத்த 130 கோடியில் நிலை நிதி ஏற்படுத்தப்படும்
- பழனி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்
- பயிற்சி பெற்ற ஓதுவார்கள் மற்றும் அர்ச்சர்களை உருவாக்க அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
- சுற்றுலாத்துறை
- குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மேம்படுத்தப்படும்
- மலைவசாத்தளங்களில் சாகச சுற்றுலா ஏற்படுத்தப்படும்
- சுற்றுலாத்துறைக்கு 187.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- சமூகநலத்துறை
- 762.23 கோடியில் சமூகநலத்துறையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு 1.05 கோடி ஒதுக்கீடு
- புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத்திட்டத்திற்காக 1725.4 கோடி ஒதுக்கீடு
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிக்காக 2536 கோடி ஒதுக்கீடு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion