மேலும் அறிய

Ind vs Eng: நொந்து போய் வெளியேறிய கோலி... நக்கலாய் வழி அனுப்பி வைத்த இங்கிலாந்து ரசிகர்கள்!

கோலி பெவிலியன் திரும்பி கொண்டிருந்தபோது, பார்மி ஆர்மி ரசிகர்கள் ‘சீரியோ விராட்’ எனப் பாடினார். சீரியோ என்றால் ‘குட்-பை’ என அர்த்தமாம். 

லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் கோலி 7 ரன்களுக்கு வெளியேறினார். 

ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட்டான கோலி பெவிலியன் திரும்பியபோது, பார்மி ஆர்மி என்றழைக்கப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரசிகர்கள் பாட்டு பாடி கோலியை வழி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் இப்போது வைரலாகி உள்ளது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆண்டர்சன் பந்துவீச்சில், 7 முறை கோலி அவுட்டாகி வெளியேறியுள்ளார். இந்த செய்தி, இந்திய ரசிகர்களுக்கு கடுப்பாக இருந்தாலும் இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 

ஆண்டர்சனும் கோலியின் விக்கெட்டை மைதானத்தில் கொண்டாட தொடங்கிவிட்டார். நொந்து போன முகத்துடன் கோலி பெவிலியன் திரும்பி கொண்டிருந்தபோது, பார்மி ஆர்மி ரசிகர்கள் ‘சீரியோ விராட்’ எனப் பாடினார். சீரியோ என்றால் ‘குட்-பை’ என அர்த்தமாம். 

Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!

நேற்றைய தின ஆட்டத்தில், ஏற்கனவே ஆண்டர்சன் பந்துவீச்சில் ராகுலும், புஜாராவும் அவுட்டாகி இருந்தனர். 4-2 என இந்திய அணி தத்தளிக்க அரம்பித்தபோது கேப்டன் கோலியிடம் இருந்து பொறுப்பான ஆட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், மீண்டும் தனது தவறான ஷாட் செலக்‌ஷனால் ஆண்டர்சனின் வலையில் சிக்கினார் கோலி. 17 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கோலி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இது இந்திய ரசிகர்கள் மத்தியிலும், கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. 

கடைசியாக, 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்திருந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கோலி சதம் அடிக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில், 4 இன்னிங்ஸில் மொத்தம் 69 ரன்கள் அடித்துள்ளார், அதிகபட்சமாக 42 ரன்கள். 

கோலி அவுட்டாவதுதான் வருத்தம் அளிக்கிறது என்றால், ஒரே டிசைனில் அவுட்டாவதுதான் ரசிகர்களை இன்னும் ஏமாற்றம் அடையச் செய்கிறது, கோலியின் மீதான நம்பிக்கையை தகர்த்து வருகிறது. ஒரே டிசைனில், தவறான ஷாட்டால் விக்கெட் கீப்பர் அல்லது ஸ்லிப்பில் இருப்பவர்களிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வருகிறார் கோலி. விரைவில் கம்-பேக்கிற்காக வெயிட்டிங்!

பீச் வாலி பால்... பிரியாணி சேலஞ்ச்....துபாயில் தோனி படை ‛எஞ்சாய் எஞ்சாமி’

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget