மேலும் அறிய

பீச் வாலி பால்... பிரியாணி சேலஞ்ச்....துபாயில் தோனி படை ‛எஞ்சாய் எஞ்சாமி’

தோனி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் ஸ்டைலாக அந்த விளையாட்டை விளையாடுவது புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடருக்காக துபாயில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் பிரியாணி சேலஞ்ச், பீச் வாலிபால் விளையாடும் தோனி உள்ளிட்ட வீரர்கள் போன்றவை ரசிகர்களாக வெகுவாக கவர்ந்துள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 14ஆம் தேதி மீண்டும் யுஏஇ சென்றது. சென்னையில் இருந்து விமானம் மூலம் யுஏஇ சென்றனர். அதில் தோனி,ரெய்னா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் அணியுடன் சென்றனர். 

இந்த நிலையில், துபாய் கடற்கரையோரத்தில் தோனி உள்ளிட்ட சில வீரர்கள் பீச் வாலிபால் விளையாடும் புகைப்படங்களை சிஎஸ்கே அணியில் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தோனி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் ஸ்டைலாக அந்த விளையாட்டை விளையாடுவது புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதில், தோனியின் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்தும், ஸ்டேடஸ் ஆகவும் வைத்துள்ளனர்.

Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!

சிஎஸ்கே அணியின் டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யமான வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் ஹரிசங்கர் ரெட்டியிடம், அணியின் பிசியோதெரபி டாமி சிம்செக், “நான் வீசும் ஒரேபந்தில் நீ சிக்ஸ் அடிக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று பந்தயம் கட்டுவார். இந்தப் பந்தயத்தில் யார் தோற்றாலும், ஜெயித்தவருக்கு பிரியாணி வாங்கிக்கொடுக்க வேண்டும். டாமின் முதல் பந்திலேயே ஹரிசங்கர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட, அருகில் இருந்த வீரர்கள் கொண்டாடுவது போல வீடியோ முடிகிறது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் சென்னை அணி யுஏஇ சென்றுள்ளது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் சென்னை அணி சென்னையில் இருந்து கிளம்பியது முதல் யுஏஇ சென்று ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டது வரை சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த காட்சிகளுக்கு பின்னால் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க பாடலும் வருகிறது. இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். 

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் சென்னை அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ் (அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

Ind vs Eng, 2021: ரன் மெஷின் ரிப்பேரா...? சதம் அடிச்சு 2 வருஷமாச்சு! காலியானதா கோலி சரக்கு! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget