Cricket in Olympics 2028: ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டா? உறுதிசெய்யும் முனைப்பில் ஐசிசி
இந்த ஒலிம்பிக் தொடரை அடுத்து, 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் பாரிஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பிரமாண்டமாகவும், பாதுகாப்பாகவும் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் இதற்கு முன்பாக 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்று இருந்த 6 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. மேலும் 13ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்தியா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் வென்றது. அதன்பின்னர் மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. மொத்தமாக இந்திய அணி இம்முறை பதக்கப்பட்டியலில் 7 பதக்கங்களுடன் 47ஆவது இடத்தை பிடித்தது.
இந்த ஒலிம்பிக் தொடரை அடுத்து, 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் பாரிஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2032-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கான இடமும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் இருந்து இனி வரும் ஒலிம்பிக் தொடர்களை பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டையும் சேர்க்க ஐசிசி முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளதால், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைக்கும் முனைப்பில் ஐசிசி முயற்சித்து வருகிறது.
ICC to push for cricket’s inclusion in the Olympic Games going forward, starting preparations for a bid on behalf of the sport with the primary target being its addition to the Los Angeles 2028 itinerary: International Cricket Council pic.twitter.com/iXxbIu2lRw
— ANI (@ANI) August 10, 2021
முன்னதாக, 1900-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. கிட்டத்தட்ட 128 ஆண்டுகளுக்கு பிற்கு மீண்டும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கும் பணிகளில் ஐசிசி தீவிரம் காட்டி வருகின்றது.