ICC T20I Rankings: சூர்யகுமார் முதலிடம் தவறியது; முகமது ரிஸ்வான், கோலி, ரோகித் சர்மா பின்னடைவு
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வெளியாகியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் முதலிடத்தை தவறவிட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முதல் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வெளியாகியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் முதலிடத்தை தவறவிட்டிருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் முதல் இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
கடைசியாக அவர் விளையாடிய டி20 போட்டிகளில் ஹாட்ரிக் சதம் அடித்திருந்தார். இதுதான் அவரை தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேற்றியது. எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர் 8 ரன்களில் ஆட்டம் இழந்ததால் தற்போது மீண்டும் தனது முதல் இடத்தை அவர் தவற விட்டிருக்கிறார். குறுகிய காலமாக இருந்தாலும் சரி நீண்ட காலமாக இருந்தாலும் சரி சூர்ய குமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தை பிடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
முதலிடத்தில் ரிஸ்வான்..
தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர் முகமது ரிஸ்வான். இவர் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அடுத்ததாக சூரியகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுமட்டுமல்ல சூரியகுமாரை தவிர வேற எந்த ஒரு இந்திய வீரரும் முதல் 10 இடத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் இந்த தரவரிசைப் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 15வது இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா 16வது இடத்தில் இருக்கிறார்.
View this post on Instagram
பந்துவீச்சு தரவரிசை:
இதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலும் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்ரிக்காவில் குயின்டன் டி காக் 8 இடங்கள் முன்னேறி பன்னிரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அக் 4ஆம் தேதி ஆட்டத்தில் சதம் விளாசிய ரூசோவ் 23 இடங்கள் முன்னேறி 20 இடத்திலும், அதிரடி வீரர் டேவிட் மில்லர் 10 இடங்கள் முன்னேறி 29-வது இடத்திலும் உள்ளனர். இந்திய பவுலர்கள் யாரும் முதல் 10 இடத்தில் இடம் பெறவே இல்லை. ஆனால், ஒரே ஆறுதலாக தமிழக வீரர் அஸ்வின் 28 இடங்கள் முன்னேறி 20 வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இப்படியாக ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், டேவிட் மில்லர் முதலிடத்தைப் பிடிக்க, ரஷித் கான் இரண்டாவது இடத்திலும், அசரங்கா மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர் 12-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார்.