Happy Birthday MS Dhoni: ரூ.15 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட தோனியின் பைக்!
மகேந்திர சிங் தோனி பைக் பிரியம். அவரிடம் இல்லாத பைக் இல்லை. நீங்கள் நம்ப மாட்டீர்கள்.... மஹியின் முதல் பைக் யமஹா ஆர்எக்ஸ் 135 தான்.
இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றிருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் ரசிகர்கள் மனதில் குடியிருக்கிறார். சில நேரங்களில், அவரது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையை தாண்டி, பொழுதுபோக்காக அவர் செய்யும் செயல்கள்தான் கவனத்தை ஈர்த்தன. தோனிக்கு பைக்குகள் மீதுள்ள விருப்பம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இன்று, தோனியின் முதல் பைக்கின் கதையை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
கூல் கேப்டனின் முதல் பைக்கை வாங்கியவர் யார்?
எம்.எஸ்.தோனியின் முதல் பைக் யமஹா ஆர்.எக்ஸ் 135 ஆகும். கரக்பூரில் ரயில்வேயில் பணிபுரிந்தபோது, தோனி தனது நண்பர்களுடன் இந்த பைக்கில் சவாரி செய்து தொலைதூர பயணம் மேற்கொண்டார். கடந்த 2003 ஆம் ஆண்டில், தோனி தனது பைக்கை விற்றார். பன்னா என்ற நபருக்கு இந்த பைக்கை ரூ. 15,000 க்கு விற்றதாக கூறப்படுகிறது.
Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!
மனைவிக்கு பரிசாக விண்டேஜ் கார்
சமீபத்தில், தோனி 11ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு விண்டேஜ் கார் ஓன்றை பரிசாக அளித்தார். எம்.எஸ்.தோனி ஆட்டோமொபைல்களின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரிடம் நிறைய கார்கள் மற்றும் பைக்குகள் உள்ளன. அவரின் சில கார்களில் ஃபெராரி 500 ஜி.டி.ஓ, ஹம்மர் எச்2, கவாசாகி நிஞ்ஜா எச் 2, ஹார்லி-டேவிட்சன் பேட்பாய், ஸ்கார்பியோ போன்றவை அடங்கும். தற்போது, இந்த விண்டேஜ் காரும், தோனி கார் கலெக்ஷனில் சேர்ந்துள்ளது. நாளை தோனிக்கு பிறந்தநாள். அவருக்கு மனைவி சாக்ஷி எதை பரிசாக கொடுக்கப்போகிறார் என்று நாளை தெரியும்.
தோனியின் கிரிக்கெட் பயணம்
மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். இந்தியாவுக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ரன்கள் எடுத்துள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில் 10,773 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 98 டி20 போட்டிகளில் விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலு தோனியின் சரவெடியாய் வெடித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மொத்தம் 211 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார்.
கொரோனா அதிகரித்து வருவதால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) ஒத்திவைக்கப்பட்ட பின்னர் தோனி தனது நேரத்தை அனுபவித்து வருகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் தனது ராஞ்சி பண்ணை வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸின் (சி.எஸ்.கே) கேப்டனாக இருக்கும் தோனி வழக்கமாக தனது செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதைக் காணலாம்.