மேலும் அறிய

Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!

'இங்க யாரு வந்துட்டாலும், நீ என் வூட்டு புள்ள'னு கட்டி அணைச்சுக்கும் நம்ம சென்னை நமக்காக ஆட வந்த தோனியை மட்டும் விட்டு வைக்குமா என்ன?

''நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்குண்டா.. அது தான் இந்த ஊருடா''னு.. சான்சே இல்லாத ஒரு சாங்க போட்டு பட்டைய கிளப்பினாரு அனிருத். கோயம்பேட்ல, எக்மோர்ல, ஏர்போர்ட்லனு சென்னையில கால் வைக்குற யாரா இருந்தாலும்.. 'அட ஆமாம்.. மெட்ராசு என்னோட இன்னொரு நேட்டிவ்'னு சொல்ல வச்சிடும் இந்த சிங்கார சென்னை. 'இங்க யாரு வந்துட்டாலும், நீ என் வூட்டு புள்ள'னு கட்டி அணைச்சுக்கும் நம்ம சென்னை நமக்காக ஆட வந்த தோனியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? மத்தவங்கள கையோட அழைச்சுட்டு போற சென்னை தோனியை நெஞ்சோட அணைச்சுக்கிட்டு. ஐபிஎல் ஒரு பிசினஸ், ஒரு கேம் அப்படி இப்படினு ஆயிரம் சொன்னாலும் சென்னைக்கும், ஐபிஎல்க்கும், தோனிக்கும் ஒரு பெரிய பாண்ட் இறுகிக்கிடக்கு. இந்த இடத்துல சென்னைனா, தாம்பரத்துல இருந்து கடலுக்கும், பாலவாக்கத்துல இருந்து ஆந்திர பார்டருக்கும் கணக்கு இல்ல. தோனி விஷயத்துல சென்னை லவ்னா அது தமிழ்நாட்டோட ரிப்லக்‌ஷன் தான்.


Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!

சென்னையோட செல்லப்பிள்ளை தோனினா அது தமிழ்நாட்டோட செல்லப்பிள்ளைங்றதுதான் சங்கதி. அதாரு.. அதாரு.. உதாரு.. உதாருன்னு நீல கலர் இந்திய ஜெர்சியை போட்டுகிட்டு அசால்ட்டா பல சம்பவங்கள செஞ்சிட்டு இருந்த மகேந்திர சிங் தோனி, மஞ்சக் கலர் ஜெர்சியை போட்டப்பிறகு தான் தல தோனியா இங்க வந்தாரு. தோனி இண்டர்நேஷனல் மேட்ல இருந்து ஒதுங்கிக்கிறேனு சென்னைல ஒக்காந்துகிட்டுதான் சொன்னாரு.. அப்பக்கூட கண்ணுல தண்ணி வச்ச பேன்சு பூறாவும் 'விடுங்கப்பா.. தலய மஞ்ச ஜெர்ஸில மாஸா பாக்கலாம்'னு தனக்குதானே ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க.. எல்லாத்துக்கும் மொத புள்ளி இந்த ஐபிஎல் தான்.

ஏது? இந்திய டீமே பிரிஞ்சுகிடக்குமா? பாரின் பிளேயர் நம்ம டீம்ல இருப்பாங்களா? இந்த கான்செப்ட் வேலைக்காவாது.. நம்ம ஊரு ஆளயே, எவனாவது போட்டியா பாப்பானா? இப்படித்தான் ஐபிஎல் தொடங்குனப்ப வந்துது டாக். ஆனா அப்றம் நடந்த கத எல்லாருக்குமே தெரியும். கத்திய எடுத்து வெட்டிக்கல குத்திக்கல மத்தபடி எல்லா சண்டையும் இந்த ஐபிஎல் உண்டாக்கிச்சு.. இண்டர்நேஷனல்ல ஒரு இந்தியா - பாகிஸ்தான்னா.. ஐபிஎல் ல ஒரு சென்னை- மும்பைனு ஆகிப்போச்சு.. எப்படா ஐபிஎல் வரும்.. சண்ட செய்யலாம்னு காத்துக்கிடந்தது ஒரு பெங்கூட்டம்.. இப்படி எதிர்பார்த்ததவிட வேற லெவல்ல ரீச் ஆச்சுஇந்த ப்ரீமியர் லீக். இந்த எதிர்பார்ப்பும், ரீச்சும் ரசிகர்கள்ட மட்டும் இல்ல.. ப்ளேயர்ஸ்கிட்டவும் ஒரு நெருக்கத்த உண்டாக்கிச்சு.. அதுதான் அந்தந்த ஊரோட நெருக்கம். 


Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!

வருஷா வருஷம் ஒரு பேமிலி ட்ரிப்பாவே அந்த ஊருக்காகவும், அந்த டீமுக்காகவும் ப்ளேயர்ஸ் வந்து போறதும் தான் இந்த நெருக்கத்துக்கு ரீசன். இந்த நெருக்கமும், அன்பும் தான் இரண்டு வருஷ கேப் விட்டு மறுபடி சென்னை டீமுக்காக தோனி கையெழுத்து போட்டப்ப 'பேக் கோம் மஹி'னு சாக்‌ஷிய கேட்க வைச்சது. ஆமா.. 'கேம் டூ ஹோம்'னு அழகா தோனிய சொல்ல வச்சிது. ஊரோட இந்த லவ், வெறும் காத்துக்கும், மண்ணுக்குமானது இல்ல. அது அந்த ஊரோட சனத்தோட லவ்வு. 

எனக்கு எல்லாத்தவிடவும் தல தலனு சொல்றதுதான் பிடிக்கும்னு நம்ம தல தோனியே சொன்னதுக்கு பின்னாடி கோடான கோடி ரசிகர்கள் இல்லாம வேறு யாரு இருக்கா? நம்ம ஊரோட ஸ்பெஷலே எது யாரு கொடுத்தாலும் அத தாரு மாறா திருப்பி கொடுக்றது. அதே கான்செப்ட்ல தோனி கொடுத்த பாசத்தையும், காதலையும் பல மடங்கு அள்ளித்தூவுனாங்க தல பேன்ஸ்.. தல தோனியின் பேன்ஸ். 


Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!

தல பேன்ஸுன்னு சொன்னதும், வராரு விளையாடுறாரு அவருக்கான பேன்ஸூனு மட்டும்னு சுருக்கிக்க முடியாது. இந்த அன்பு, சாக்‌ஷி, ஸிவானு தொடரும் தான்.. தோனியோட பார்ம் ஹவுஸ், பைக், காருனு, நாய், குதுரனு தோனி விரும்புற எல்லாத்தையும் நம்ம வீட்ல ஒன்னாவே நினைச்சு பாக்குறதும், அத வைரலாக்குறதும் நம்ம ஊரு தோனி கன்னிங்கதான். சேப்பாக்கம் கிரவுண்ட சுத்தி தோனி பேருலயும், அவரோட போட்டோ போட்டும் எத்தன கடைங்க, கடலூர்ல கட்டுன வீட்டுக்கு மஞ்ச் பெய்ண்ட் அடிச்சு தோனி பேரு வச்சாரே ஒரு ஃபேனு, நடுராத்திர தோனி மீனம்பாக்கம் வந்தாலும் குவிஞ்சு நிக்குதுல்ல கூட்டம், அது பிராக்டீஸ் மேட்சா இருந்தாலும் புல்லாவுதுல கிரவுண்ட் இதெல்லாம் வெறும் கிரிக்கெட் - ஃபேன் நெருக்கம் மட்டுமல்ல. அதையும் தாண்டுனது. அது தோனிக்கும் - சென்னைக்குமான நெருக்கம். அது வார்த்தையால சொல்லமுடியாத ஒரு  ஃபீல். 


Dhoni | விளையாட வந்த தோனிய வாரி அணைச்சுக்கிட்ட சென்னை : இது உறவு இல்ல.. உணர்வு!

எது எப்படியோ, இந்திய டீமோட தோனி ஐபிஎல் வந்த பின்னாடி சென்னையோட தோனியா ஆகிட்டாரு. இனி ப்யூட்சர்ல ஐபிஎல் நடந்தாலும், நடக்கலனாலும், தோனி இருந்தாலும், ஒதுங்கி போனாலும் சென்னையோட செல்லப்பிள்ள தோனிதான்,எங்க தல தோனி தான்.. சென்னையும் தோனிக்கு இன்னொரு வீடு தான்.. எப்பவும்.. ஏன்ன்னா..? இங்க வந்து கிடந்து போன பின்னாடி இந்த ஊர வெறும் ஊரா பாக்கவே முடியாது. சென்னையோட ராசி அப்படி. அதான் முன்னாடியே சொன்னங்களே, நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்குண்டா.. அது தான் இந்த ஊருடா. 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget