WTC முதல் ஆஷஸ் வரை… ஜூன் மாதம் முழுவதும் காத்திருக்கும் என்டர்டெயின்மென்ட்… விளையாட்டு நிகழ்வுகளின் முழு பட்டியல்!
ஜூன் மாதம் முழுவதும் நடைபெற உள்ள விளையாட்டு நிகழ்வுகளை மிஸ் செய்யாமல் இருக்க, அவை என்னென்ன? எப்போது? எங்கு? யார்யார் மோதுகிறார்கள்? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஜூன் மாதம் முழுவதும் நம்மை மகிழ்விக்க தொடர்ச்சியாக, கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் தொடர், கால்பந்தில் UEFA யூரோபா லீக், ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ், ஆசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டி, போன்ற பல விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்ற உள்ளன. இதில் எந்த என்டர்டெயின்மென்ட்டையும் மிஸ் செய்யாமல் இருக்க, அவை என்னென்ன? எப்போது? எங்கு? யார்யார் மோதுகிறார்கள்? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
கிரிக்கெட்
ஜூன் 7-11: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இந்தியா vs ஆஸ்திரேலியா - ஓவல், லண்டன்
ஜூன் 1-4: இங்கிலாந்து vs அயர்லாந்து டெஸ்ட் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
ஜூன் 2: இலங்கை vs ஆப்கானிஸ்தான், 1வது ஒருநாள் போட்டி - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம், சூரியவெவா
ஜூன் 4: இலங்கை vs ஆப்கானிஸ்தான், 2வது ஒருநாள் போட்டி - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், சூரியவெவா
ஜூன் 4: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், 1வது ஒருநாள் போட்டி - ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா
ஜூன் 6: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், 2வது ஒருநாள் போட்டி - ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா
ஜூன் 7: இலங்கை vs ஆப்கானிஸ்தான், 3வது ஒருநாள் போட்டி - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், சூரியவெவா
ஜூன் 16-20: ஆஷஸ், முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்
ஜூன் 9: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ், 3வது ஒருநாள் போட்டி - ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், ஷார்ஜா
ஜூன் 14-18: பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட் - ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், மிர்பூர்
ஜூன் 22-26: மகளிர் ஆஷஸ், ஒரே டெஸ்ட் - இங்கிலாந்து எதிராக ஆஸ்திரேலியா - டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
ஜூன் 26: வெஸ்ட் இண்டீஸ் (மகளிர்) vs அயர்லாந்து (மகளிர்), 1வது ஒருநாள் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், கிராஸ் ஐலெட்
ஜூன் 27: இலங்கை (மகளிர்) vs நியூசிலாந்து (மகளிர்), 1வது ஒருநாள் போட்டி - காலி சர்வதேச மைதானம்
ஜூன் 28 - ஜூலை 2: ஆஷஸ், 2வது டெஸ்ட் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்
ஜூன் 29: வெஸ்ட் இண்டீஸ் (மகளிர்) vs அயர்லாந்து (மகளிர்), 2வது ஒருநாள் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம், கிராஸ் ஐலெட்
ஜூன் 30: இலங்கை (மகளிர்) vs நியூசிலாந்து (மகளிர்), 2வது ஒருநாள் போட்டி - காலி சர்வதேச மைதானம்
கால்பந்து
மே 31: UEFA யூரோபா லீக் இறுதி, செவில்லா vs ரோமா - புடாபெஸ்ட்
ஜூன் 3: UEFA மகளிர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, பார்சிலோனா vs VfL வொல்ப்ஸ்பர்க் - ஐன்ட்ஹோவன்
ஜூன் 7: யூரோபா கான்பரன்ஸ் லீக் இறுதி, ஃபியோரெண்டினா vs வெஸ்ட் ஹாம் யுனைடெட் - ப்ராக்
ஜூன் 9-18: இண்டர்காண்டினென்டல் கோப்பை - புவனேஸ்வர்
ஜூன் 10: UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதி, மான்செஸ்டர் சிட்டி vs இண்டர் மிலன் - இஸ்தான்புல்
ஜூன் 14: UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதி, நெதர்லாந்து vs குரோஷியா
ஜூன் 15: UEFA நேஷன்ஸ் லீக் அரையிறுதி, ஸ்பெயின் vs இத்தாலி
ஜூன் 15 - ஜூலை 2: AFC U-17 ஆசிய கோப்பை - தாய்லாந்து
ஜூன் 18: UEFA நேஷன்ஸ் லீக், மூன்றாம் இடத்திற்கான போட்டி
ஜூன் 18: UEFA நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டி
டென்னிஸ்
ஜூன் 11 வரை: பிரெஞ்ச் ஓபன்
ஜூன் 12-18: ATP250 ஸ்டட்கார்ட்
ஜூன் 12-18: WTA250 ஹெர்டோஜென்போஷ்
ஜூன் 12-18: WTA250 நாட்டிங்ஹாம்
ஜூன் 12-18: ATP250 ஹெர்டோஜென்போஷ்
ஜூன் 19-25: WTA250 பர்மிங்காம்
ஜூன் 19-25: WTA500 பெர்லின்
ஜூன் 19-25: ATP500 லண்டன்
ஜூன் 19-25: ATP500 ஹாலே
ஜூன் 25 - ஜூலை 1: WTA250 பேட் ஹோம்பர்க்
ஜூன் 25 - ஜூலை 1: ATP500 மல்லோர்கா
ஜூன் 26 - ஜூலை 1: WTA500 ஈஸ்ட்போர்ன்
ஜூன் 26 - ஜூலை 1: ATP250 ஈஸ்ட்போர்ன்
பாட்மின்டன்
ஜூன் 4 வரை: தாய்லாந்து ஓபன் (BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 500) - பாங்காக்
ஜூன் 6-11: சிங்கப்பூர் ஓபன் (BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 750) - சிங்கப்பூர்
ஜூன் 13-18: இந்தோனேசியா ஓபன் (BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 1000) - ஜகார்த்தா
ஜூன் 20-25: தைபே ஓபன் (BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300) - தைபே
ஹாக்கி
மே 31: ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை, அரையிறுதி - இந்தியா vs தென் கொரியா - சலாலா, ஓமன்
ஜூன் 1: ஜூனியர் ஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி - சலாலா, ஓமன்
ஜூன் 2-11: ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை - ககாமிகஹாரா, ஜப்பான்
ஜூன் 2: FIH புரோ லீக் (ஆண்கள்) - இந்தியா vs பெல்ஜியம் - லண்டன்
ஜூன் 3: FIH புரோ லீக் (ஆண்கள்) - கிரேட் பிரிட்டன் vs இந்தியா - லண்டன்
ஜூன் 7: FIH ப்ரோ லீக் (ஆண்கள்) - நெதர்லாந்து vs இந்தியா - ஐன்ட்ஹோவன்
ஜூன் 8: FIH ப்ரோ லீக் (ஆண்கள்) - அர்ஜென்டினா vs இந்தியா - ஐந்தோவன்
ஜூன் 10: FIH ப்ரோ லீக் (ஆண்கள்) - நெதர்லாந்து vs இந்தியா - ஐந்தோவன்
ஜூன் 11: FIH ப்ரோ லீக் (ஆண்கள்) - இந்தியா vs நெதர்லாந்து - ஐந்தோவன்
கபடி
ஜூன் 27-30: ஆசிய சாம்பியன்ஷிப் - பூசன், தென் கொரியா