மேலும் அறிய

Women's FIFA: நெருங்கிய ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை.. எகிறும் எதிர்பார்ப்புகள்.. இந்தியாவில் நேரடி ஒளிபரப்பை காண்பது எப்படி?

இந்தியாவிலும் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதால் இந்த அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பார்ப்பது எப்படி என்று தேடி வருகின்றனர்.

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ள 2023 ஃபிபா பெண்கள் உலகக் கோப்பையை நடத்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தயாராகி வருகிறது. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையின் ஒன்பதாவது பதிப்பை இரண்டு நாடுகள் கூட்டாக நடத்துவதன் மூலம் புதிய கலாச்சாரத்தை உருவாக்குகிறது. முந்தைய பதிப்புகளை ஒப்பிடுகையில், இம்முறை அதிக அணிகள் பங்கேற்கின்றன. முன்னர் 24 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது 32 அணிகள் போட்டியிடுவதால், போட்டிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆண்கள் ஃபிஃபா-வைப் போலவே இதற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Women's FIFA: நெருங்கிய ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை.. எகிறும் எதிர்பார்ப்புகள்.. இந்தியாவில் நேரடி ஒளிபரப்பை காண்பது எப்படி?

மொத்த பரிசுத்தொகை

பங்கேற்கும் 32 நாடுகளுக்கான மொத்த பரிசுத் தொகை $110 மில்லியன் ஆகும், இது முந்தைய பதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். கத்தாரில் நடைபெற்ற ஆண்கள் போட்டியில் மொத்த பர்ஸ் $440 மில்லியன் ஆகும். FIFA கோப்பையை வெல்லும் அணிக்கு $10.5 மில்லியன் வழங்கப்படும். அதில் $6.21 மில்லியன் வீரர்களுக்கும், $4.29 மில்லியன் கூட்டமைப்புக்கும் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்: Oommen Chandy Passes Away: அதிகாலையில் சோகம்.. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்.. கேரளா காங்கிரஸ் அறிவிப்பு

உலகக் கோப்பை நடைபெறும் நகரங்கள்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முழுவதும் உள்ள, ஒன்பது வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ள 10 மைதானங்கள் போட்டிகளுக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், சிட்னியில் மட்டும் இரண்டு இடங்களில் போட்டிகள் நடத்தப் படுகிறது. சிட்னி கால்பந்து ஸ்டேடியம் மற்றும் ஸ்டேடியம் ஆஸ்திரேலியா என்ற இரண்டு மைதானங்கள் அங்கு உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டேடியம் ஆஸ்திரேலியா ஆகஸ்ட் 20 அன்று இறுதிப் போட்டிக்காக தயாராகி வரும் தளமாகும். இந்தியாவிலும் இதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதால் இந்த அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பார்ப்பது எப்படி என்று தேடி வருகின்றனர்.

Women's FIFA: நெருங்கிய ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை.. எகிறும் எதிர்பார்ப்புகள்.. இந்தியாவில் நேரடி ஒளிபரப்பை காண்பது எப்படி?

இந்தியாவில் 2023 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையை எதில் பார்க்கலாம்?

FanCode நடைபெறவிருக்கும் FIFA மகளிர் உலகக் கோப்பை 2023 ஐ பிரத்தியேகமாக நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. FanCode 1Stadia வுடம் இருந்து உரிமைகளைப் பெற்று, அதன் டிஜிட்டல் தளத்தில் இந்தியா முழுவதும் அனைத்து போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

2023 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தையும் இதில் நாம் காணலாம். ஃபேன்கோடின் மொபைல் ஆப்ஸ் (Android, iOS, TV) மற்றும் ஆண்ட்ராய்டு டிவியில் கிடைக்கும் டிவி ஆப்ஸ் ஆகியவற்றில் காணலாம். Amazon Fire TV Stick, Jio STB, Samsung TV, Airtel XStream, OTT Play மற்றும் www.fancode.com ஆகியவற்றில் தொலைக்காட்சி மூலம் கால்பந்து ரசிகர்கள் அனைத்து போட்டிகளையும் பார்க்கலாம். 2023 மகளிர் உலகக் கோப்பையின் அனைத்து 64 போட்டிகளும் இதில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதால், ரசிகர்களுக்கு ஈடுஇணையற்ற கால்பந்து அனுபவத்தை FanCode வழங்குகிறது.  இந்தியாவில் உள்ள கால்பந்து ஆர்வலர்கள் பரபரப்பான லைவ் ஆக்‌ஷன் மட்டுமின்றி, போட்டி முழுவதிலும் உள்ள பிரத்யேக மேட்ச் ஹைலைட்ஸ் மற்றும் கிளிப்களையும் கூட இதே தளத்தில் பார்க்க முடியும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.