FIFA World cup 2022: இதுதான் சிறந்த கோல்! மகிழ்ச்சியில் பிரேசில் ரசிகர்கள்.. அடுத்த ஆட்டத்தில் நெய்மர் விளையாடுவாரா?
பிரேசில் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது. உலகக் கோப்பையில் 5 முறை சாம்பியனான பிரேசில் தோற்று இருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
பிரேசில் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை பந்தாடியது. உலகக் கோப்பையில் 5 முறை சாம்பியனான பிரேசில் தோற்று இருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இந்தப் போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் கணுக்கால் பகுதியில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பந்தை எதிர்கொண்டபோது காயம் அடைந்த நெய்மர், மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் எதிர்வரும் போட்டிகளில் நெய்மர் ஆடுவார் என பிரேசில் அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். நெய்மரின் நிலை குறித்து 48 மணி நேரத்திற்குப் பிறகே தெரியவரும் என பிரேசில் அணியின் மருத்துவர் தெரிவித்தார். இதில் பிரேசில் வீரர் ரிசார்லிசன் 2 கோல்களை அடித்தார். இவர் அடித்த இரண்டாவது கோல் ஆகச்சிறந்த கோல்களின் வரிசையில் இடம்பிடித்துள்ளது.
மேஜிக் கோல்
இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் களத்தின் இடது புறத்தில் இரண்டு பிரேசில் வீரர்கள் ஒன் டு ஒன் என்று பந்தை எடுத்துச் செல்ல வினிஷியஸ் இடது புறம் பாக்ஸுக்கு வெளியே இருந்து பந்தை உள்ளுக்குள் அடித்தார். அங்கு பந்தை கட்டுப்படுத்துவது போல் நின்றிருந்த திடீரென காலால் நிறுத்தி அப்படியே உடலை வளத்து வலது காலால் ஒரு உதை உதைத்தார். அது நேராக வலைக்குள் சென்றது.
The first four days of this #FIFAWorldCup
— Vighnesh (@wikki971) November 24, 2022
was fantastic 🤩
imo #Brazil 🇧🇷 will lift world cup this time 😍 Fabulous team performance 💫#Richarlison Wowwwww 💥💥 What A Goal 💥💥 #BrazilvsSerbia pic.twitter.com/F17Y8kGKvw
இதை எதிரணி வீரர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.
நெய்மருடன் சீக்கிய சிறுவன்!
முன்னதாக, ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். அப்போது வீரர்களுடன் சிறார்கள் உடன் செல்வார்கள்.
பிரேசில்-செர்பியா ஆட்டத்தின்போது பிரேசில் வீரர் நெய்மர் சீக்கிய மதத்தைச் சேர்ந்த சிறுவனுடன் வந்தார்.
#worldcup #sikh #football #soccer #PaidMediaUnreliable #ChatPeChat
— Jasmeet Singh Chouhan (@chouhan_jasmeet) November 25, 2022
Our little buddy Josh Singh came out with Brazil’s Neymar at the World Cup today in Qatar ⚽️
Neymar is one of the greatest footballer (or soccer) player to ever play for Brazil 🇧🇷 and in the history of the game pic.twitter.com/C1UMmg650m
அவர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது சிறுவனின் தோளில் கையை வைத்துக் கொண்டே இருந்தார். அந்தச் சிறுவனின் பெயர் ஜோஷ் சிங் என்று தெரியவந்துள்ளது.
முதல்முறை
அரபு நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன்பு கடந்த 2002ஆம் ஆண்டில் ஆசிய நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணைந்து நடத்தின.
குளிர்காலத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுவாகும். இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத் இல்லாமல் நடைபெறும் முதல் உலகக் கோப்பையும் இதுவே. உலகக் கோப்பையை நடத்தும் மிகச் சிறிய நாடு என்ற பெயரையும் கத்தார் பெற்றுள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 26 லட்சம் தான்.
பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
மொத்த பரிசுத்தொகை ரூ.3,586 கோடியாகும். கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். ரன்னர்-அப் அணிக்கு ரூ.244 கோடி பரிசுத் தொகையும், 3-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.220 கோடியும், 4-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.203 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ. 73 கோடி அளிக்கப்படும்.
காலிறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு தலா ரூ.138 கோடியும், 2-ஆவது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும் கிடைக்கும்.