Highest Paid Footballer: மில்லியன்கணக்கில் சம்பளம்.. மிதக்கும் கால்பந்து வீரர்கள்..இந்த பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு இந்த இடமா?
உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கால்பந்து வீரர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் பங்கேற்று கடந்த நவம்பர் 20ம் தேதி விளையாடி வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, ரிக்கி பாண்டிங் எப்படி உலகின் தலைசிறந்த வீரர்களோ, அதேபோல், கால்பந்து விளையாட்டை பொறுத்தவரை ரொனால்டோ, மெஸ்ஸி மற்றும் நெய்மர் என பல்வேறு வீரர்கள் உள்ளனர்.
உலகில் இவர்கள் எவ்வளவு தலைசிறந்த வீரராக கருதப்பட்டாலும், இவர்களது சம்பளமும் தலைசிறந்ததாகவே இருக்கும். அப்படி உலகில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கால்பந்து வீரர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
- கிலியான் எம்பாப்பே - 128 மில்லியன் (பாரிஸ் செயிண்ட்- ஜெர்மைன்)
- லியோனல் மெஸ்ஸி - 110 மில்லியன் (பாரிஸ் செயிண்ட்- ஜெர்மைன்)
- ரொனால்டோ - 100 மில்லியன் (மான்செஸ்டர் யுனைடெட்)
- நெய்மர் - 87 மில்லியன் (பாரிஸ் செயிண்ட்- ஜெர்மைன்)
- முகமது சலா - 53 மில்லியன் (லிவர்பூல்)
- எர்லிங் ஹாலண்ட் - 39 மில்லியன் (மான்செஸ்டர் சிட்டி)
- ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி - 35 மில்லியன் (பார்சிலோனா)
- ஏடன் அசார்டு - 31 மில்லியன் (ரியல் மாட்ரிட்)
- ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா - 25 மில்லியன் (விசல் கோப்)
- கெவின் டி புரூய்ன் - (மான்செஸ்டர் சிட்டி)
மேலே குறிப்பிட்டுள்ள கால்பந்து வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்காக விளையாடினாலும், தற்போது வேறு நாட்டில் விளையாடிவரும் லீக் அணிகள் மூலமாகவே இந்த சம்பளம் பெறுகின்றனர். தாங்கள் சொந்த நாட்டில் இவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து அட்டவணை:
நவம்பர் 25
பிரேசில் vs செர்பியா- அதிகாலை 12.30 மணி
வேல்ஸ் vs ஈரான் - பிற்பகல் 3.30 மணி
கத்தார் vs செனகல் - மாலை 6.30 மணி
நெதர்லாந்து vs ஈக்வேடார் - இரவு 9.30 மணி
நவம்பர் 26
இங்கிலாந்து vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs ஆஸ்திரேலியா - பிற்பகல் 3.30 மணி
போலாந்து vs சவுதி அரேபியா - மாலை 6.30 மணி
பிரான்ஸ் vs டென்மார்க் - இரவு 6.30 மணி
நவம்பர் 27
அர்ஜெண்டினா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
ஜப்பான் vs கோஸ்டா ரிகா - பிற்பகல் 3.30 மணி
பெல்ஜியம் vs மொராக்கோ - மாலை 6.30 மணி
குரோஷியா vs கனடா - இரவு 9.30 மணி
நவம்பர் 28
ஸ்பெயின் vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
கேமரூன் vs செர்பியா - பிற்பகல் 3.30 மணி
தென் கொரியா vs கானா - மாலை 6.30 மணி
பிரேசில் vs சுவட்சர்லாந்து - இரவு 9.30 மணி
நவம்பர் 29
போர்ச்சுக்கல் vs உருகுவே - அதிகாலை 12.30 மணி
நெதர்லாந்து vs கத்தார் - இரவு 8.30 மணி
ஈக் வேடார் vs செனகல் - இரவு 8.30 மணி
நவம்பர் 30
வேல்ஸ் vs இங்கிலாந்து - அதிகாலை 12.30 மணி
ஈரான் vs அமெரிக்கா - அதிகாலை 12.30 மணி
துனிசியா vs பிரான்ஸ் - இரவு 8.30 மணி
ஆஸ்திரேலியா vs டென் மார்க் - இரவு 8.30 மணி
டிசம்பர் 1
போலாந்து vs அர்ஜெண்டினா - அதிகாலை 12.30 மணி
சவுதி அரேபியா vs மெக்சிகோ - அதிகாலை 12.30 மணி
குரோஷியா vs பெல்ஜியம் - இரவு 8.30 மணி
கனடா vs மொராக்கோ - இரவு 8.30 மணி
டிசம்பர் 2
ஜப்பான் vs ஸ்பெயின் - அதிகாலை 12.30 மணி
கோஸ்டா ரிகா vs ஜெர்மனி - அதிகாலை 12.30 மணி
தென் கொரியா vs போர்ச்சுக்கல் - இரவு 8.30 மணி
கானா vs உருகுவே - இரவு 8.30 மணி
டிசம்பர் 3
கேமரூன் vs பிரேசில் - அதிகாலை 12.30 மணி
செர்பியா vs சுவிட்சர்லாந்து - அதிகாலை 12.30 மணி