மேலும் அறிய

FIFA Group Standings: மகளிர் பிஃபா உலகக்கோப்பை… குரூப் சுற்றுகளின் நிலவரம் என்ன?

போட்டிகள் தொடங்கி சில நாட்களே ஆன போதும், சில அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்ற சந்தேக நிலை இப்போதே உருவாகிவிட்டது.

மகளிர் கால்பந்தை பொருத்தவரை அமெரிக்க அணி எப்போதுமே முழு ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் அனைத்து 8 சீசன்களிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது அந்த அணி. அவர்களுடைய மோசமான உலகக்கோப்பை என்றாலே மூன்றாவது இடத்தை மூன்று முறை பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றது மட்டும்தான். அதற்கு கீழ் அவர்கள் சென்றதே இல்லை. இம்முறையும் கிட்டத்தட்ட அந்த பாதையில் தான் உள்ளனர்.

ஜெர்மனி அணி இந்த தொடரை 6-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை அபாரமாக வீழ்த்தி தொடங்கியுள்ளது. போட்டிகள் தொடங்கி சில நாட்களே ஆன போதும், சில அணிகள் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற முடியுமா என்ற சந்தேக நிலை இப்போதே உருவாகிவிட்டது. குரூப் E இல் உள்ள அமெரிக்கா மற்றும் நெதர்லாந்தைப் போலவே, குரூப் C இன் பெரிய அணிகளான ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 16 இடங்களைக் கொண்ட அந்தந்த சுற்றுக்கான பாதையைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது இருக்காது.

ஆனால் ஒவ்வொரு அணியும் அந்த பாதையில் எந்த அளவு முன்னிலையில் உள்ளனர் என்பது வரும் போட்டிகளை அதிக சுவாரஸ்யம் ஆக்குகிறது.

குரூப் ஏ

நியூசிலாந்து  சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஒரு போட்டியை குரூப் ஸ்டேஜில் ஆட உள்ளது, அந்த போட்டியில் வெல்பவர் நேரடியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். டிரா ஆனால் சுவிட்சர்லாந்து அணி மட்டும் முன்னேறும். முன்னேறும் மற்றொரு அணி அதே நேரத்தில் நடக்கும் பிலிப்பைன்ஸ் - நார்வே போட்டியின் முடிவில் தெரிய வரும். ஒரு வேளை பிலிப்பைன்ஸ் தோற்றால் கண்டிப்பாக வெளியேறும். நியூசிலாந்து அணி தோற்று அல்லது டிரா ஆகி இருந்து, நார்வே வென்றால் அந்த அணிக்கும் வாய்ப்பு உள்ளது.

FIFA Group Standings: மகளிர் பிஃபா உலகக்கோப்பை… குரூப் சுற்றுகளின்  நிலவரம் என்ன?

குரூப் பி

இன்று நடைபெறும் ஆஸ்திரேலியா - நைஜீரியா போட்டியில் வெல்பவர்கள் முதலிடம் செல்வார்கள். ஒரு வேளை நைஜீரியா வென்றால் இந்த குரூப்பில் முதல் மூன்று அணிகள் இடையே பலத்த போட்டி நிலவும். அயர்லாந்து இரு போட்டிகளில் தோற்று ஏற்கனவே வெளியேறிவிட்டது. 

குரூப் சி

இந்த குரூப்பில் ஏற்கனவே முடிவுகள் தெரியவந்துவிட்டன. ஸ்பெயின் மற்றும் ஜப்பான் அணிகள் இரண்டு போட்டிகளை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டனர். கோஸ்டா ரி்கா மற்றும் ஜாம்பியா அணிகள் இரண்டு போட்டிகள் தோற்று வெளியேறியுள்ளனர். கோல் வித்தியாசத்தில் ஜப்பானை விட ஒரு புள்ளி அதிகமாக இருப்பதால் ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் கடைசி குரூப் ஆட்டத்தில் வெல்லும் அணி முதலிடம் பெரும். டிரா ஆனால் மீண்டும் கோல் வித்தியாசத்தில் ஸ்பெயின் முன்னிலை வகிக்கும். 

தொடர்புடைய செய்திகள்: ADR Report: இந்தியாவில் எந்த எம்.எல்.ஏ.வுக்கு எவ்வளவு சொத்து? - வெளியானது பட்டியல் - ஆய்வறிக்கையில் அதிர்ச்சி!

குரூப் டி

இந்த குரூப்பில் எல்லா அணிகளும் ஒரே ஒரு போட்டியை மட்டுமே ஆடியுள்ளதால், கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. குறிப்பாக நாளை நடைபெற உள்ள டென்மார்க் - இங்கிலாந்து இடையேயான போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும். இருவருமே ஒரு வெற்றியுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். அதில் தோற்கும் அணியை பின்னுக்கு தள்ளி சீனா மற்றும் ஹெய்டி அணிகள் முன்னேற முயற்சிக்கும். 

குரூப் ஈ

இந்த குரூப்பில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக உள்ளன. இன்று நடைபெறும் போர்ச்சுகல், வியட்நாம் இடையேயான போட்டியில் தோற்கும் அணி வெளியேறும். டிரா ஆனால் இரு அணிகளும் கிட்டத்தட்ட வெளியேறும். ஆனால் வெல்லும் அணி அவர்களின் அடுத்த போட்டியிலும் (போர்ச்சுகலுக்கு அமெரிக்காவுடன், வியட்நாமிற்கு நெதர்லாந்துடன்) வென்றால் கண்டிப்பாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

FIFA Group Standings: மகளிர் பிஃபா உலகக்கோப்பை… குரூப் சுற்றுகளின்  நிலவரம் என்ன?

குரூப் எஃப்

எல்லா அணிகளும் ஒரே ஒரு போட்டியில் ஆடியுள்ள இந்த குரூப்பில் பிரேசில் அணி மட்டும் ஒரு போட்டியை வென்றுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜமைக்கபொட்டி டிராவில் முடிந்தது. இதனால் இந்த குரூப்பில் வரும் போட்டிகள் எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்துதான் அடுத்து சுற்று வாய்ப்புகள் முடிவாகும். 

குரூப் ஜி

இந்த குரூப்பிலும் எல்லா அணிகளும் ஒரு போட்டியை மட்டும் ஆடி இருந்தாலும், ஸ்வீடன் மற்றும் இத்தாலி அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. அடுத்ததாக நடைபெறும் ஸ்வீடன் - இத்தாலி போட்டியில் வெல்லும் அணி முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தென்னாப்பிரிக்கா - அர்ஜென்டினா போட்டி டிராவில் முடிந்தால் ஸ்வீடன் - இத்தாலி போட்டியில் வெல்லும் அணி உள்ளே செல்லும். ஒருவேளை யாராவது தோற்றால் நேரடியாக வெளியேற்றப்படுவார்கள். 

குரூப் எச்

குரூப் ஜி ஐ போலவே இந்த குரூப்பிலும் முதல் இரண்டு அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. அடுத்ததாக நடைபெறும் ஜெர்மனி மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெல்லும் அணி அடுத்தச்சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த இடங்களில் உள்ள தென் கொரியா - மொராக்கோ அணிகளின் வாய்ப்புகள் அவர்களது போட்டியின் முடிவுகளுக்கு பிறகுதான் தெரிய வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
சபாநாயகருக்கு வாழ்த்து; தேர்தல் ஆணையத்துக்கு நன்றி! 18வது முதல் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி!
Breaking News LIVE:  நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் சற்று நேரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு உரை
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Crime: ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்!
Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Embed widget