FIFA World cup 2022: உலகக்கோப்பை கால்பந்தில் வரலாறு படைத்த தென்கொரியா, ஜப்பான்..! நாக் அவுட் சுற்றுக்கு சென்றது எப்படி..?
முதல்முறையாக உலகக்கோப்பையில் 2வது சுற்றுக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் நுழைந்துள்ளது.
முதல்முறையாக உலகக் கோப்பையில் 2ஆவது சுற்றுக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென் கொரியா அணி நுழைந்தது. அந்த அணி 5 முறை சாம்பியனான பிரேசில் அணியை டிசம்பர் 6-ஆம் தேதி எதிர்கொள்கிறது.
போர்ச்சுக்கலை வீழ்த்திய தென்கொரியா:
உலகக் கோப்பை கால்பந்தில் தென் கொரியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் தொடங்க உள்ளது.
முன்னதாக குரூப் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று கடைசி லீக் ஆட்டத்தில் எச் பிரிவில் போர்ச்சுகலும், தென் கொரியாவும் மோதின. இந்த ஆட்டத்தில் தென் கொரிய வீரர்கள் கிம் யங்-ஜிவோன் 27-ஆவது நிமிடத்திலும், ஹவாங் ஹீ சான் கூடுதல் நேரத்தில் ஒரு கோலை வலைக்குள் செலுத்தினார்.
இதன்மூலம், த்ரில் வெற்றி பெற்ற தென் கொரியா நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.
குரூப் எச் பிரிவில் இடம்பெற்றிருந்த தென் கொரியா 3 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா ன 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
ஜப்பான் அசத்தல்:
இந்த அணியுடன் ஜப்பான் அணியும் முதல் முறையாக 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்று முதல் 2ஆவது சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.
2ம் சுற்றுக்கு யார்..? யார்..?
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்தது. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியது.
View this post on Instagram
அந்தப் பட்டியலை காண்போம். ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த 3 முறை பைனலுக்கு முன்னேறிய நெதர்லாந்து, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் ஆகிய நாடுகள் குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்களில் விளையாடியது. நெதர்லாந்து 2 ஆட்டங்களிலும், செனகல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. நெதர்லாந்து ஓர் ஆட்டத்தில் டிராவும், செனகல் 1 ஆட்டத்தில் தோல்வியும் அடைந்தது. நெதர்லாந்து 7 புள்ளிகளுடனும், செனகல் 6 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது.