'திருநெல்வேலிக்கே அல்வா வா'- பவுன்சர் போட்டு வெறுப்பேற்றும் இங்கிலாந்து : கடுப்பான பும்ரா
இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 28* ரன்களுடனும், முகமது ஷமி 44* ரன்களுடம் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் முன்னிலை 200 ரன்களுக்கு மேல் சென்றுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில் ஆட்டத்தின் 91ஆவது ஓவர் மார்க் வூட் வீசினார். அப்போது அவர் பும்ராவிற்கு பவுன்சர் போட தொடங்கினார். அத்துடன் அவர் பும்ராவுடன் சூடான வார்த்தை போரில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வார்த்தை போர் மிகவும் முட்டியது. அந்த ஓவரின் கடைசில் நடுவர்கள் பும்ராவிடம் பேசி அவரை சாந்தப்படுத்தினர். அதற்கு எடுத்து ஆட்டத்தின் 92-ஆவது ஓவரை மார்க் வூட் வீசினார். அதில் பும்ரா தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரிலேயே வூட் வீசிய பவுன்சர் பும்ராவின் ஹெல்மமெட்டில் பட்டது. எனினும் பும்ரா அதற்கு பின்பு பயப்படாமல் தைரியமாக ஆடி வருகிறார். இந்த நிகழ்வை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
All that happened between Bumrah and Wood 🔥 #INDvENG | #Bumrah pic.twitter.com/px35S7lMaE
— ° (@anubhav__tweets) August 16, 2021
How's the Josh Buttler #INDvENG #Bumrah #kabulairport #AskTheExperts pic.twitter.com/IgRODoMIR7
— Tulsidas Khan (@ysunnyyadav) August 16, 2021
ஏற்கெனவே மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆடி வந்தது. அப்போது கடைசி விக்கெட்டிற்கு ஆண்டர்சென் 125-ஆவது ஓவரில் களத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த 126-ஆவது ஓவரை இந்தியாவின் பும்ரா வீசினார். அவர் அடுத்தடுத்து பவுன்சர் பந்துகளை வீசி ஆண்டர்செனை திணறடித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே கடும்போட்டி நடைபெற்றது. இதை பார்த்த தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், "இந்தியா பேட்டிங் செய்யும்போது பும்ரா களத்திற்கு வரும்போது என்னிடம் பந்தை கூடுங்கள் என்று ஆண்டர்சென் கெஞ்சுவார்" எனக் கூறியிருந்தார்.
Jimmy gana be begging for the ball when Jasprit comes in to bat…
— Dale Steyn (@DaleSteyn62) August 14, 2021
தற்போது ஆண்டர்செனிற்கு முன்பாக மார்க் வூட் அதை திருப்பிக்கொடுத்து வருகிறார். பவுன்சர் போட்டு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ராவிற்கு தற்போது பவுன்சர் பந்துகள் போடப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க:பரபரப்பான கட்டத்தை எட்டியது லார்ட்ஸ் டெஸ்ட் : தோல்வியை தவிர்க்குமா இந்தியா?