CSK Captain MS Dhoni Won Trophy: இன்னொரு மாஸ் தெரியுமா? இந்த விளையாட்டிலும் வெற்றி கோப்பையைக் கைப்பற்றிய தோனி!
ஜேஎஸ்சிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜார்க்கண்ட் டென்னிஸ் வீரர் சுமீத் குமார் பஜாஜ் உடன் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஜேஎஸ்சிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஜார்க்கண்ட் டென்னிஸ் வீரர் சுமீத் குமார் பஜாஜ் உடன் இணைந்து விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதற்கு முன்பு ஏற்கனவே இரண்டு முறையும் அவர் சாம்பியன் பட்டத்தை இதே டென்னிஸ் போட்டியில் வென்றுள்ளார். இது அவரது மூன்றாவது சாம்பியன் பட்டம் ஆகும். ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சர்வதேச மைதானத்தில் அவர் விளையாடினார்.
எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் ஆனார். அதைத் தொடர்ந்து 2011 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையும், 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்றுத் தந்தார்.
MS Dhoni Sir & Sumeet Kumar Bajaj Doubles Winner for the Third time 🎾🏆
— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) November 15, 2022
Congrats Brother @SumeetKumar1711
#Hattrick 😄 #ThalaDhoni @msdhoni pic.twitter.com/WY462BqGVF
அவர் களத்தில் இறங்கினாலே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடுவார். அது கிரிக்கெட்டில் மட்டுமல்ல தற்போது டென்னிஸ் போட்டியிலும் தொடர்வது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர் ஒருவர் தோனி எப்போது கோப்பைகளை வெல்வதை நிறுத்துவார் என்று வேடிக்கையாக கமென்ட் செக்ஷனில் கேள்வி எழுப்பினார். இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த முறையும் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளார் தோனி. இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி, 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Tennis time for MS Dhoni. pic.twitter.com/OjIaIkZQt3
— Johns. (@CricCrazyJohns) November 11, 2022
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல்(IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
டிரேடிங் செய்யப்பட்ட வீரர்கள்
இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான ஜேசன் பெஹ்ரென்டோர்ஃப் மும்பை அணிக்கும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி லாக்கி ஃபெர்குசன் மற்றும் ரகுமானுல்லாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டிரேடிங் செய்துள்ளது.
ஆரம்பிக்கலாங்களா..! "தல" தோனியுடனான புகைப்படத்தை பகிர்ந்து "ராக்ஸ்டார்" ஜடேஜா வெளியிட்ட ட்வீட்!
டெல்லியில் இருந்து கொல்கத்தா அணிக்கு ஷர்துல் தாக்குர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார்.
ஜடேஜா தக்க வைப்பு
சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் ஜடேஜா டிரான்ஸ்ஃபர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. ஆனால், எம்.எஸ்.தோனி அவரை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதேநேரம், கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோரை வீரர்கள் தக்க வைப்பு நாளுக்கு முன்பே சிஎஸ்கே விடுவித்துள்ளது.