(Source: ECI/ABP News/ABP Majha)
ஆரம்பிக்கலாங்களா..! "தல" தோனியுடனான புகைப்படத்தை பகிர்ந்து "ராக்ஸ்டார்" ஜடேஜா வெளியிட்ட ட்வீட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ரவீந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் ரவீந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில்தான் முடிந்தது. இந்த முறை இங்கிலாந்து அணி கோப்பை வென்றது. கிரிக்கெட் ரசிகர்களை அடுத்து மகிழ்விக்க ஐபிஎல் திருவிழா தயாராகிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் (IPL) தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்பதால், இதன் வியாபாரமும் பன்மடங்கு விரிவடைந்து, நாட்டின் பெரும் விளையாட்டு திருவிழாவாகவே ஐபிஎல் மாறியுள்ளது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டுவைன் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜடேஜாவும் விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், கேப்டன் தோனி, ஜடேஜாவை தக்க வைக்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜடேஜா அணியில் தக்க வைக்கப்பட்டார். ஐபிஎல் முதல் சீசனில் ஜடேஜா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார்.
அந்த சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி ராஜஸ்தான் ராய்ல்ஸ் கோப்பையை முத்தமிட்டது. 14 ஆட்டங்களில் விளையாடி 135 ரன்களை எடுத்தார் ஜடேஜா. ஷேன் வார்னே, ஜடேஜாவை "ராக்ஸ்டார்" என்று அழைத்தார்.
ஒப்பந்த முறைகேடுகளால் எழுந்த தடை காரணமாக ஜடேஜா 2010 ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
IPL 2023 Retention: ஜடேஜா தக்கவைப்பு; பிராவோ விடுவிப்பு - பட்டியலை வெளியிட்ட சிஎஸ்கே...!
ராக்ஸ்டார் பட்டம்
இதையடுத்து ஜடேஜ 2011 இல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக வாங்கப்பட்டார். அடுத்த ஆண்டு (2012) சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் ரூ. 9.8 கோடிக்கு ஜடோஜா வாங்கப்பட்டார். அந்த ஏலத்தில் ஜடேஜாதான் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராவார்.
2015 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக 11 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கைப்பற்றி அசத்தினார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எனினும், அணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து சீசனின் நடுவில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் விலா எலும்பில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அந்தத் தொடரில் இருந்து ஜடேஜா விலகினார். ஜடேஜாவும், சிஎஸ்கேவும் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துகொண்டனர்.
Pollard IPL Records: CSK ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பொல்லார்டின் ஐபிஎல் சாதனைகள்..!
சிஎஸ்கேவுடன் பிளவு
அணி நிர்வாகத்துக்கும் ஜடேஜாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனினும், சிஎஸ்கே தரப்பில் "அப்படி எதுவும் இல்லை. மருத்துவ ரீதியாகவே அவர் விளையாடாமல் இருக்கிறார்" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
Everything is fine💛 #RESTART pic.twitter.com/KRrAHQJbaz
— Ravindrasinh jadeja (@imjadeja) November 15, 2022
இந்நிலையில், 2023 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து ஜடேஜா விடுவிக்கப்படுவார் என்று கூறப்பட்டுவந்தது. ஆனால், அவர் தற்போது தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜடேஜா வெளியிட்ட ட்விட்டில், "எவரிதிங் இஸ் ஃபைன்" #RESTART (மறுபடியும் தொடங்கலாம்) என்று ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார். அத்துடன், கேப்டன் தோனியுடன் அவர் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.