TNPL Cricket: கோவை கிங்ஸ் கேப்டனாக ஷாருக்கான் தேர்வு! சூடுபிடித்த டிஎன்பிஎல்!
திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், கோவை ஆகிய நான்கு நகரங்களில் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வீரர்களை தேர்வு செய்வதற்கான வரைவு இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது பதிப்பு நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு அதிகார்வப்பூர்வ அனுமதி அளிக்கும்பட்சத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் 2021ல் டி.என்.பி.எல் நடத்துவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், கோவை ஆகிய நான்கு நகரங்களில் இந்த ஆண்டுக்கான டி.என்.பி.எல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வீரர்களை தேர்வு செய்வதற்கான வரைவு இன்று நடைபெற்றது.
The Kings 👑 get together for #TNPL2020 🏏@TNPremierLeague @TNCACricket @StarSportsTamil pic.twitter.com/o8sViT70TH
— Lyca Kovai Kings (@LycaKovaiKings) March 10, 2020
இதில், லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷாருக்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சையத் முஸ்தாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்ற சிறப்பாக பங்காற்றிய ஷாருக்கான், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் பங்கேற்று விளையாடினார். இவரது சிறப்பான ஆட்டத்தை அடுத்து, இப்போது கோவை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை சேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விவரம் அணிகள் வாரியாக:
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அருண் பி, விஜய் குமார் எஸ், சதீஷ் ஆர், ராம் அரவிந்த் ஆர், ஜெகநாத் சினிவாஸ் ஆர் எஸ், சந்தான சேகர் வி, சித்தார்த் எம், சுஜய் எஸ், ஹரிஷ் குமார் எஸ், அருண்குமார் வி, பிரஷீத் ஆகாஷ் எச், சாய் கிஷோர் ஆர், ஜெகதீசன் என், சாய் பிரகாஷ் வி, கௌஷிக் காந்தி எம், அலெக்ஸாண்டர் ஆர், சசிதேவ் யு, சோனு யாதவ், ராகுல் டி
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியன் ஆர், ராதாகிருஷ்ணன் எஸ்
லைக்கா கோவை கிங்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஷிஜித் சந்திரன் பி, சுரேஷ் குமார் ஜே, கவுஜித் சுபாஷ் ஜே, விக்னேஷ் கே, மனிஷ் ஜி ஆர், கவின் ஆர், அரவிந்த் ஜி, கங்கா ஸ்ரீதர் ராஜு வி, முகிலேஷ் யு, அபிஷேக் தன்வார், அதீக் உர் ரஹ்மான் எம் ஏ, செல்வகுமரன் என், அஸ்வின் வெங்கட்ரமணன், சாய் சுதர்சன் ஆர், நிஷாந்த் குமார் ஆல்வார், ஷாருக் கான் எம், நடராஜன் டி, அஜித் ராம் எஸ்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: சீனிவாசன் இ, கிரண் கஷ்யப் கே, ஆனந்தகுமார் எஸ், யுதீஷ்வரன் வி
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தினேஷ் எஸ், மணிகண்டன் எஸ், ராஜ்குமார் ஆர், மோகன் பிரசாத் எஸ், சித்தார்த் எஸ், அரவிந்த் எஸ், மான் கே பாஃப்னா, பிரான்சிஸ் ரோகின்ஸ் ஆர், கவுதம் தாமரை கண்ணன் கே, அஸ்வின் கிறிஸ்ட் ஏ, துஷார் ரஹேஜா, கருப்புசாமி ஏ, ரூபன் ராஜ் எம், தினேஷ் கார்த்திக்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: முகமது ஆஷிக், அஃபான் காதர், ஆதித்யா கிரிதர், சத்தியநாராயணன் எல், நடராஜன் எஸ்.டி, ராஜ்குமார் ஆர் ஐ, அஸ்வின் பாலாஜி
திண்டுக்கல் டிராகன்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விஷால் வைத்யா கே, அருண் எஸ், அத்வைத் ஷர்மா, சுதேஷ் ஆர், சுவாமிநாதன் எஸ், விக்னேஷ் எல், சீனிவாசன் ஆர், மோஹித் ஹரிஹரன் ஆர் எஸ், லோகேஸ்வர் எஸ், ஹரி நிஷாந்த், அஸ்வின் சி, சஞ்சய் எம்.எஸ்., லட்சுமன் வி, மணி பாரதி கே, சிவ முருகன் ஏ.ஆர்., அஸ்வின் ஆர், விவேக் ஆர், சிலம்பரசன் எம்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: குர்ஜப்னீத் சிங், விமல் குமார் ஆர், கிஷன் குமார், விக்னேஸ்வரன் எஸ்
சியேச்சம் மதுரை பேந்தர்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: மிதுன் ஆர், கவுதம் வி, நிர்மல் குமார் பி.எஸ்., சதுர்வேத் என்.எஸ்., பிரவீன் குமார் பி, அனிருத் சீதா ராம் பி, அருண் கார்த்திக் கே.பி., ரோஹித் ஆர், ஆஷிக் சீனிவாஸ் ஆர், கவுசிக் ஜே, சந்திரசேகர் டிடி, ஆதித்யா வி, சிலம்பரசன் ஆர் , தீபன் லிங்கேஷ் கே, வருண் சக்ரவர்த்தி, கிரண் ஆகாஷ் எல்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: பி சுகேந்திரன், கே ராஜ்குமார், பி ராக்கி, பி சரவணன், ஜாதவேத் சுப்பிரமணியன்
ரூபி திருச்சி வாரியர்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ராகுல் பி, ஆகாஷ் சும்ரா, யாழ் அருண் மொழி எம்.இ, அனிருத்தா எஸ், பொய்யாமொழி எம், ரஹில் எஸ் ஷா, சந்தோஷ் சிவ் எஸ், ஆண்டனி தாஸ், ஆதித்யா கணேஷ், நிதிஷ் எஸ் ராஜகோபால், கணேஷ் ஆர், சுமந்த் ஜெயின், முகமது அட்னான் கான், சரவணகுமார் பி, அமித் சாத்விக் வி.பி., ஹேமந்த் குமார் ஜி, முகுந்த் கே, கார்த்திக் சண்முகம் ஜி, முரளி விஜய்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: சுனில் சாம், மதிவண்ணன் எம், கார்த்திக் ஆர்
நெல்லை ராயல் கிங்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: திரிலோக் நாக் எச், ஜிதேந்திர குமார் சி.எச், சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன் வி, அஜித் குமார் டி, அபிநவ் எம், ஹரிஷ் என்.எஸ், பிரதோஷ் ரஞ்சன் பால், ஷருண் குமார் எஸ், இந்திரஜித் பி, அஸ்வத் முகுந்தன், சூர்யபிரகாஷ் எல். அர்ஜுன் பி மூர்த்தி, அபராஜித் பி
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: ஸ்ரீ நிரஞ்சன் ஆர், வீரமணி டி, சரத்ராஜ் ஏ, சுரேஷ் சி, விவேக் ஆர், ரோஹித் ராம் ஆர், சரத்குமார் எம்
சேலம் ஸ்பார்டன்ஸ் (22)
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: பிராணேஷ் பி, அபிஷேக் எஸ், அக்ஷய் வி சீனிவாசன், அஸ்வின் எம், பூபாலன் எஸ், டேரில் எஸ் ஃபெராரியோ, கணேஷ் மூர்த்தி எம், கோபிநாத் கே எச், லோகேஷ் ராஜ் டிடி, பெரியசாமி ஜி, சுபம் மேத்தா எஸ், சுஷில் யு, விஜய் குமார் எம் , வாஷிங்டன் சுந்தர் எம்.எஸ்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்: கார்த்திகேயன் ஆர், கிஷூர் ஜி, ஆரிஃப் ஏ, ஆர் கார்த்திகேயன், எம் சுகனேஷ், அபிநவ் விஷ்ணு, ஏவிஆர் ரத்னம்





















