Yograj Singh:தோனியை தொடர்ந்து கபில் தேவை தாக்கிய யோக்ராஜ் சிங்! காரணம் என்ன?
இந்திய அணிக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் மீதும் குற்றம் சுமத்தி இருக்கிறார் யோக்ராஜ் சிங்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தான் தற்போது தோனி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். இதனிடைய இந்திய அணிக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கபில் தேவ் மீதும் குற்றம் சுமத்தி இருக்கிறார் யோக்ராஜ் சிங்.
அதாவது யுவாராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி எப்படி அழித்துவிட்டதாக யோக்ராஜ் சிங் நினைக்கிறாரோ அதேபோல் தனது கிரிக்கெட் வாழ்வை கபில் தேவ் அழித்து விட்டதாக அவட் நினைக்கிறார்.
கபில் தேவ் மீது குற்றச்சாட்டு:
இது தொடர்பாக யோக்ராஜ் சிங் பேசுகையில்,"எங்கள் காலத்தின் மிகச் சிறந்த கேப்டன் கபில் தேவ், நான் அவரிடம் இந்த உலகம் உன்னை தூற்றும் இடத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினேன். இன்று யுவராஜ் சிங் 13 கோப்பைகளை வென்று இருக்கிறார். நீ வெறும் ஒரு கோப்பை மட்டும் வென்று இருக்கிறாய். இத்துடன் இந்த விவாதம் முடிந்தது. இனி இது குறித்து பேச ஒன்றும் இல்லை"என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக கடந்த 1982 ஆம் ஆண்டு கபில் தேவ் வழி நடத்திய இந்திய அணியில் யோக்ராஜ் சிங் விளையாடி இருந்ததும் அதனைத்தொடர்ந்து அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதும், இதற்கு காரணம் கபில் தேவ் தான் என்று அவர் நினைத்ததன் வெளிப்பாடு தான் இது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே போல் இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்த இரண்டு கேப்டன்களை இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.