WTC Points Table: அங்குசாமி நீ நல்லா இருப்ப! வெளியேறிய நியூசிலாந்து! இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தற்போது தகுதி பெறும் வாய்ப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்
இங்கிலாந்திடாம் நியூசிலாந்து அணி தோல்வியடைந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தற்போது தகுதி பெறும் வாய்ப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிபோட்டிக்கு இந்தியா அணி செல்வதற்கு இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணி வீழ்த்தியதன் மூலம் இந்திய அணிக்கு ஒரு தெளிவான பாதை தற்போது கிடைத்துள்ளது.
வழிவிட்ட நியூசிலாந்து:
ஆஸ்திரேலிய அணி உடனான பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி 295 வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதுமட்டுமின்றி நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்யின்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதறகான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தடையாய் நிற்கும் இலங்கை:
இருப்பினும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-1 என்கிற கணக்கில் வெற்றி பெறவிடில் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும். அதனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை டெஸ்ட் தொடர் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.
தற்போதைய வாய்ப்புகள்:
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நல்ல வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்கிற காட்டயத்தில் உள்ளது.
- இந்திய அணி இந்த தொடரை 5-0,4-1, அல்லது 3-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றால் எந்த ஒரு அணியின் தயவின்றி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.
- 3-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்றால் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெல்ல வேண்டும்.
- அடுத்ததாக 3-2 என்கிற கணக்கில் வெற்றி பெற்றால் இலங்கை அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடவுள்ள தொடரில் ஒரு போட்டியையாவது டிரா செய்ய வேண்டும்.
- ஒரு வேளை ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி 2-2 என்கிற கணக்கில் முடித்தால் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளின் டெஸ்ட் தொடர்களையே சார்ந்துள்ளது.
- தென்னாபிரிக்கா இலங்கையை 2-0 என்ற கணக்கில் தோற்கடிக்க வேண்டும்.
- அதன்பின் இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை குறைந்தபட்ச 1-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும்.
INDIA'S QUALIFICATION SCENARIO FOR WTC FINAL. 🇮🇳 pic.twitter.com/Us7ZHyICht
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 2, 2024
WTC புள்ளிப்பட்டியல்:
1. இந்தியா - புள்ளிகள் 110, PCT 61.11
2. தென்னாப்பிரிக்கா - புள்ளிகள் 64, PCT 59.26
3. ஆஸ்திரேலியா - புள்ளிகள் 90, PCT 57.69
4. நியூசிலாந்து - புள்ளிகள் 72, PCT 50.00
5. இலங்கை - PCT0 560.0 புள்ளிகள்