T20 WC 2022: டி20 உலககோப்பை : அரையிறுதியில் யார்..? யாருடன் மோதல்...? முழு விவரம் உள்ளே..!
டி20 உலக கோப்பைத் திருவிழா ஆஸ்திரேலிய மண்ணில் ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் சூப்பர் 12 சுற்று இனிதே நிறைவடைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் திருவிழா ஆஸ்திரேலிய மண்ணில் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய நாளுடன் சூப்பர் 12 சுற்று முடிந்தது. இன்று ஒரே நாளில் நெதர்லாந்து-தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம்-பாகிஸ்தான், இந்தியா-ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின.
அரையிறுதி :
இதில் நெதர்லாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. சூப்பர் 12 குரூப் 2 பிரிவில்தான் இன்றைய ஆட்டங்கள் நடந்தன. சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதை அடுத்து, அந்த அணி அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறியது.
இதையடுத்து இந்தியா ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குரூப் 1 பிரிவிலிருந்து தகுதி பெற்ற அணிகள் , குரூப் 2 பிரிவில் தகுதி பெற்ற அணிகளுடன் அரையிறுதியில் மோதும். அதன்படி, குரூப் 2 பிரிவில் இருந்து பாகிஸ்தான் அணியும், குரூப் 1 பிரிவில் இருந்து நியூசிலாந்து அணியும் வரும் புதன்கிழமை மோதுகின்றன.
நியூசி-பாக்., இந்தியா - இங்கி.,
முதலாவது அரையிறுதி ஆட்டமான இது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானும் மோதுகின்றன. குரூப் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3ல் வெற்றியும் 1ல் தோல்வியும் அடைந்தது.
குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3இல் வெற்றியும் 2 ஆட்டங்களில் தோல்வியையும் தழுவியது. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை (நவம்பர் 10) மோதுகிறது. இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் டி20 உலகக் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது.
முனைப்பு காட்டும் அணிகள்:
நியூசிலாந்து அணி இதுவரை ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை முத்தமிடவில்லை. இதனால், இந்த முறை எப்படியாவது உலகக் கோப்பையைக் கைப்பற்ற அந்த அணி வரிந்துகட்டும். முதல் டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது.
𝐂𝐨𝐧𝐟𝐢𝐫𝐦𝐞𝐝
— Pakistan Cricket (@TheRealPCB) November 6, 2022
Pakistan 🆚 New Zealand
Semi-final at the SCG! 🏏#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/8Xqs6Qwvaf
அரையிறுதியில் ஜெயிக்கும் அணிகள் நவம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சந்திக்கும். நியூசிலாந்தும், இந்தியாவும் இறுதி ஆட்டத்தில் மோதும் என்றும் கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், கிரிக்கெட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் எந்தெந்த அணிகள் இறுதி ஆட்டத்தில் சந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What a Shot that was ☀️🔥 pic.twitter.com/obgfWXgOZW
— Rayees (@RayeesIsHere) November 6, 2022
முன்னதாக, இன்று நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரான வெஸ்லி மதேவெரே ஆட்டமிழந்தார்.
இதையடுத்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஜிம்பாப்வே. அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஒரு கட்டத்தில் 17.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.