SAT20: சாம்பியன் மகுடத்தை 2வது முறையாக சூடிய சன்ரைசர்ஸ்! தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் அபாரம்!
தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் லீக்கில் இந்த சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி.
தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் லீக்கில் இந்த சீசனிலும் சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி, டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோப்பையை தட்டித்தூக்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் மலான் 15 ரன்கள் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதனை தொடர்ந்து, சன்ரைசர்ஸ் அணியின் மற்ற வீரர்களான டாம் பெல் (55 ரன்), ஜோர்டான் (42 ரன்) அதிரடியாக பேட்டிங் செய்து ஆட்டமிழந்தனர்.
இந்த இரண்டு பேட்ஸ்மேன்களையும் அடுத்து, கேப்டன் எய்டன் மார்க்ரம் (42 ரன்கள்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (56 ரன்கள்) ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.
A moment for the boys and generations to remember, Kavya Maran lifting the 🏆 #Bundesliga #RealMadrid #OrangeArmy #SCOvFRA #Kavya #KavyaMaran #SAt20 #SECvDSG #Klaasen #Markram #CHAMPION #ILT20 #SA20Final #PSL2024 #INDvsAUSpic.twitter.com/5L6njHylQ2
— Arpita Singhal (@arpita_singhal1) February 11, 2024
அசத்திய மார்கோ யான்சன்:
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சன்ரைசர்ஸ் அணி, அதனை தொடர்ந்து பந்துவீச்சிலும் அசத்தியது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்சன், அடுத்தடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இவரது பந்துவீச்சுக்கு முன்னால், சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸில் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய முடியவில்லை. இறுதிப்போட்டியில் மார்கோ யான்சன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக, டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
எய்டன் மார்க்ரமின் தலைமையில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் 2023ல் தென்னாப்பிரிக்கா லீக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடர்ந்து, தற்போது 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் ஆனது.
வெற்றிபெற்ற அணிக்கு எவ்வளவு பணம்..?
தென்னாப்பிரிக்கா டி20 கிரிக்கெட் லீக்கில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு பலத்த பண மழை பொழிந்துள்ளது. எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து சுமார் ரூ.15.06 கோடி பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சுமார் ரூ.7.31 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் மூன்றாவது இடம் பிடித்த பார்ல் ராயல்ஸ் அணிக்கு ரூ.3.94 கோடி வழங்கப்பட்டுள்ளது. நான்காவது இடம் பிடித்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ.3.47 கோடியும், ஐந்தாம் இடம் பிடித்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்கு ரூ.1.10 கோடியும், கடைசி இடத்தில் உள்ள எம்ஐ கேபிடல்ஸ் அணிக்கு ரூ.88.61 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.