டி20 உலகக்கோப்பைக்காக இந்தியாவை ஃபாலோ செய்யும் பாகிஸ்தான்.. ப்ளான் இதுதான்!
அப்ரிடி இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையாது. எங்கள் அணியில் அனைவரும் மேட்ச் வின்னர்கள் தான் என பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், அணியின் கேப்டனான பாபர் அஸாம் கூறியுள்ளார்.
அப்ரிடி இல்லாதது அணிக்கு பின்னடைவாக அமையாது. எங்கள் அணியில் அனைவரும் மேட்ச் வின்னர்கள் தான் என பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், அணியின் கேப்டனான பாபர் அஸாம் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஆசியா கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி மற்றும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலககோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாட அனைத்து அணிகளும், அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து அவர்களை தொடர்ந்து சிறப்பாக பர்ஃபாம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் இந்திய அணியின் முக்கிய வீரரும், ரன் மிஷின் எனப்படும் விராட் கோலிக்கு இந்திய அணி நிர்வாகம் சார்பில் ஓய்வு அளிக்கப்பட்டது. விராட் பார்ம் அவுட்டில் இருப்பது தான் அவருக்கு அளிக்கப்பட்ட ஓய்வுக்கு காரணம் எனச் சொல்லப்பட்டாலும், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவ்வகையில், பாகிஸ்தான் அணியிலும் தற்போது இந்தியாவைப் போல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
Skipper Babar Azam is backing Pakistan's chances at the Asia Cup and the ICC Men's @T20WorldCup 2022 💪
— ICC (@ICC) August 13, 2022
More 👉 https://t.co/3Njzhv5x6U pic.twitter.com/qmftYp9Zbe
அவ்வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம், அணியின் அதிரடி பந்து வீச்சாளரான ஷகின் அப்ரிடிக்கு ஓய்வு அளித்துள்ளது. அணியின் முக்கிய வீரரான அப்ரிடி ஆசியா கோப்பை மற்றும் உலககோப்பையில் சிறப்பாக விளையாட அவருக்கு அணி நிர்வாகம் சார்பில், தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகின் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாமிடம், கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் உலக கோப்பை நாயகன் ரிக்கி பாண்டிங், நெதர்லாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் ஷகின் அப்ரிடி இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக இருக்காத என கேட்ட கேள்விக்கு, பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் அனைவருமே டிரெம்ப் கார்டுகள் தான் என பதில் அளித்துள்ளார். ஒருவர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த முடிவை நாங்கள் நன்றாகவே யோசித்து, ஒரு தொலைநோக்கு சிந்தனையுடன் எடுத்துள்ளோம். மேலும், அணியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள அணியின் பந்து வீச்சாளர்கள் குழு என்பது மிகவும் பலமானது, மேலும் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களை இந்த கிரிக்கெட் உலகிற்கு நிரூபிக்க சரியான தருணமாக எடுத்துக் கொண்டு விளையாடுவார்கள் என அவர் கூறியுள்ளார். நெதர்லாந்து உடனான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட நெதர்லாந்து செல்லவுள்ள பாகிஸ்தான் அணி, ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்