Watch Video: இப்படி ஒரு ஹிட்- விக்கெட்டா? சோகத்துடன் பெவிலியன் திரும்பிய கிரிக்கெட் வீரர்!
SL vs WI 1st test: தனஞ்சய டி சில்வா 95 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட்-விக்கெட்டுகள் மிகவும் அரிதானவை. ஆனால் 12-13 மணிநேர இடைவெளியில் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஹிட் விக்கெட்டில் வெளியேறியுள்ளனர். கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் போது, ஹர்ஷல் படேல் தனது பேட் மூலம் பெயில்களை தட்டிவிட்டு விக்கெட்டை இழந்தார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது, இன்று காலை இலங்கையின் தனஞ்சய டி சில்வாவின் ஆட்டமிழக்கும் முறையும் அப்படியே இருந்தது.
இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின், முதல் அரை மணி நேரத்தில், தனஞ்சய எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லாமல் வெளியேறினார். கருணாரத்னவின் சதம் மற்றும் டி சில்வாவின் அரைசதம் காரணமாக 273/4 என்ற நிலையில் முதல் நாள் வலுவாக முடிந்த பிறகு, ஆட்டமிழக்காத இருவரும் அணியின் நிலையை பலப்படுத்துவார்கள் என்று நம்பினர். TN vs Karnataka: கடைசி பந்தில் சிக்சர்... தமிழ்நாடை காப்பாற்றிய ஷாரூக்கான்... தொடர்ந்து 2வது முறை சாம்பியன்!
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷானன் கேப்ரியல் வீசிய 95 வது ஓவர் இரண்டாவது நாள் காலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு மிகவும் தேவையான வெற்றியைக் கொண்டு வந்தது. அவர் வீசிய லென்த் பந்தை ஸ்டோக் வைத்தபோது, பந்து ஸ்டைம்பை நோக்கி சென்றதாக எண்ணிய தனஞ்சய டி சில்வா பந்தை தடுக்க போய், பெல்ஸை தேவையில்லாமல் தட்டிவிட்டு ஹிட் விக்கெட் ஆனார்.
தனஞ்சய மிடில் வரிசையில் மிகவும் அழகாக பேட்டிங் செய்தார். அவர் 95 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். மிக முக்கியமாக, கேப்டன் கருணாரத்னேவுடன் நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். Dhoni Viral Pic: தமிழ்நாடு வெற்றியை ரசித்த தோனி... சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஷாரூக்கான்?
வீடியோ பார்க்க:
— Simran (@CowCorner9) November 22, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்