Dhoni Viral Pic: தமிழ்நாடு வெற்றியை ரசித்த தோனி... சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஷாரூக்கான்?
சிஎஸ்கே அணியில் இப்போது சாய் கிஷோர், ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய மூன்ற வீரர்கள் உள்ள நிலையில், 2022 சீசனில் ஷாரூக்கான் சென்னை அணியில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
![Dhoni Viral Pic: தமிழ்நாடு வெற்றியை ரசித்த தோனி... சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஷாரூக்கான்? Syed Mustaq Ali Trophy Final: Picture of MS Dhoni goes viral between Tamil Nadu and Karnataka Dhoni Viral Pic: தமிழ்நாடு வெற்றியை ரசித்த தோனி... சிஎஸ்கேவுக்கு வருகிறாரா ஷாரூக்கான்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/782c3fdeee46775b65b5b489e3872ce7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சையத் முஷ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய இந்த போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. தமிழக வீரரான ஷாரூக்கான் அட்டகாசமாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
2006-2007, 2020, 2021 என மூன்று முறை தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு வெற்றி பெற்றதன் மூலம் இரண்டாவது முறையாக தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழ்நாடு அணி. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமீபத்தில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் தோனி.
அதனை தொடர்ந்து, இன்று சையத் முஸ்தாக் அலி இறுதிப்போட்டியை தோனி பார்த்து கொண்டிருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியான இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. ஷாரூக்கானின் ஃபினிஷிங்கை பார்த்து கொண்டிருக்கிறார் தோனி. கிரிக்கெட் விளையாட்டின் ஆகச்சிறந்த ஃபினிஷரே ஒரு ஃபினிஷிங் கேமை பார்ப்பதா என ஒரு புறம் ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இன்னொரு புறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷாரூக்கான் இடம் பெறுவாரா எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fini 𝙎𝙚𝙚 ing off in sty7e! 💛#SyedMushtaqAliTrophy #WhistlePodu 🦁 pic.twitter.com/QeuLPrJ9Mh
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 22, 2021
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் களமிறங்கிய ஷாரூக் முதல் சீசனில் சரியாக விளையாடவில்லை. இரண்டாவது சீசனில் அசத்திய ஷாரூக் கான் 325 ரன்கள் அடித்து மீண்டும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரை தமிழ்நாடு அணி வென்று அசத்தியது. இதிலும் ஷாரூக் கான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய ஷாரூக் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வகையில் ஷாரூக் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இப்போது நடந்து முடிந்திருக்கும் சையத் முஸ்தாக் அலி இறுதிப்போட்டியிலும் அசத்தி இருக்கிறார் ஷாரூக்கான்.
சென்னை சூப்பர் கிங்ஸில் தமிழ்நாடு வீரர்கள்:
Chennai Boys Making 𝗧he 𝗡oise everywhere we go 🥳 #SyedMushtaqAliT20 #WhistlePodu 🦁💛 pic.twitter.com/yW5BG94hsb
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) November 22, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இப்போது சாய் கிஷோர், ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய மூன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கின்றனர். இந்நிலையில், ஐபிஎல் 2022 தொடருக்கான ஆக்ஷன் விரைவில் நடைபெற உள்ளதால், இந்த சீசனில் ஷாரூக்கான் சென்னை அணியில் இடம் பிடிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தேர்வு செய்யப்படும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் ஸ்குவாடில் இடம் பெறாமல் வாய்ப்பு வழங்கப்படாமலேயே சீசனை கழிப்பது வழக்கமாகிவிட்டது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷாரூக்கான் தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கின்றது.
கவனித்த தோனி? கவனிக்கப்படுவார்களா உள்ளூர் வீரர்கள்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)