யம்மாடியோவ்.. சொகுசு கார், ஆடம்பர வீடு!ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் நிகர சொத்து மதிப்பை இங்கே பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோஹித் ஷர்மா. ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே இந்த ஐபிஎல் சீசனில் இவர் வேறு அணிக்கு மாறலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளிலும், 2013 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வரும் ரோஹித் ஷர்மா தன்னுடைய பேட்டில் பல்வேறு நிறுவனங்களை முன்னிலை படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கிறது.
நிகர சொத்து மதிப்பு:
ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.214 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிசிசிஐ சம்பளம்:
பிசிசிஐ வருடத்திற்கு ஒருமுறை போடப்படும் ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா A+ எனப்படும் முதல் தர பிரிவில் உள்ளார். இதனால் இவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என பெற்று வருகிறார்.
ஐபிஎல் சம்பளம்:
ஐபிஎல் சீசன்களை பொறுத்தவரை 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக 16 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். Adidas, Hublot, Oakley, Ceat, Nissan, Oppo, La Liga மற்றும் Dream11 போன்ற முன்னணி பிராண்டுகளால் அவருக்கு நிறைய வருமானம் கிடைக்கிறது.
வீட்டின் மதிப்பு:
மும்பையில் உள்ள வார்லி என்ற இடத்தில் 6000 சதுர அடி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைரா ஷர்மாவுடன் வசித்துவருகிறார். 29வது மாடியில் இருக்கும் இந்த வீட்டில் இருந்து பார்த்தால் அரபிக் கடலின் காட்சி தெளிவாக இருக்கும். அவரின் அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி ஆகும்.
கார் வகைகள்:
கார்வகைகளை பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவின் சேகரிப்பில் ஸ்கோடா லாரா, டொயோட்டா ஃபார்ச்சூனர், BMW X3, Mercedes GLS 400d மற்றும் BMW M5 (Formula One Edition) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அவர் ரூபார் 3.15 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் வகை காரை வாங்கினார் என்பது கூடுதல் தகவல்.
ரோஹித் ஷர்மாவின் தொண்டு:
விளையாட்டைத்தாண்டி ரோஹித் ஷர்மா பல்வேறு தொண்டுகளை செய்துவருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை இலவசமாக அளித்து வருகிறார். கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு ரூ.80 லட்சத்தை வழங்கியுள்ளார். சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச அளவில் மும்பையை தளமாகக் கொண்ட கிரிக் கிங்டம் என்ற கிரிக்கெட் அகாடமியையும் ரோஹித் சர்மா நிறுவியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

