Champions Trophy 2025 : ”நீங்க வரலனா நாங்களும் வரமாட்டோம்” பாக் கிரிக்கெட் வாரியத் தலைவர் விளாசல்!
Champions Trophy 2025 : இந்தியா அணி பாகிஸ்தான் அணிக்கு வந்து விளையாடவில்லை என்றால் நாங்களும் இந்தியாவில் வந்து விளையாட முடியாது என பாக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்த நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு வந்து கிரிக்கெட் விளையாடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தலைவர் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாகிஸ்தானில் நடைப்பெற உள்ளது. ஆனால் இந்த தொடரில் பாதுக்காப்பு காரணங்களை காட்டி பிசிசிஐ இந்திய ஆடும் போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு சம்மதம் தெரிவிக்கவிக்காமல் போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று உறுதியாக உள்ளனர்.இதன் காரணமாக போட்டியின் அட்டவணை இது வரை வெளிவராமல் உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இயலாது என ஐசிசியிடம் தெரிவித்த பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் தலைவிதி நிச்சயமற்றதாகவே உள்ளது. உலகளாவிய கிரிக்கெட் அமைப்பு இறுதி முடிவை எடுப்பதற்காக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது.
IPL Auction 2025 : இது Homecoming நேரம்! சொந்த அணிகளுக்கே மீண்டும் திரும்பிய டாப் 5 வீரர்கள்
மொஹ்சின் நக்வி பதில்:
“பாகிஸ்தானில் விளையாடுவதற்கு இந்திய அதிகாரிகள் தங்கள் அணியை அனுப்ப விரும்பாத நிலையில், ஐசிசி இந்தியாவில் நடத்தும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது பாகிஸ்தானால் சாத்தியமில்லை என்று தெரிவித்தார். இதுபோன்ற சமத்துவமற்ற சூழ்நிலையை நாங்கள் ஏற்க முடியாது, ”என்று நக்வி புதன்கிழமை இரவு கடாபி ஸ்டேடியத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யும் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறு ஆயினும், சாம்பியன்ஸ் டிராபிக்கான முன்மொழியப்பட்ட 'ஹைப்ரிட் மாடல்' குறித்து நக்வி எச்சரிக்கையான தொனியை கையாண்டார், பிசிபி ஹைபிரிட் முறையை ஏற்காது என்று முன்பு கூறியிருந்தாலும்.கூட்டத்தில் என்ன நடந்தாலும், மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நல்ல செய்திகளையும் முடிவுகளையும் கொண்டு வருவோம் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றார்.
ஜெய் ஷா நல்ல முடிவை எடுப்பார்:
மேலும் டிசம்பரில் ஜெய் ஷா ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்பது குறித்து பேசிய நக்வி,"டிசம்பரில் ஜெய் ஷா பொறுப்பேற்கிறார், அவர் பிசிசிஐயிலிருந்து ஐசிசிக்கு மாறியதும், அவர் ஐசிசியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பார் என்று நான் நம்புகிறேன். யாராவது இத்தகைய பொறுப்பை ஏற்கும் போதெல்லாம், அவர்கள் கிரிக்கெட் அமைப்பின் நலனில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், ”என்று நக்வி கூறினார்.