Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பிற்காக கரும்பு கொள்முதல் செய்யும் பணி தீவிரம்
கோவை அவினாசி மேம்பாலத்தில் கவிழ்ந்த சிலிண்டர் டேங்கர் லாரி - எரிவாயு பரவாமல் இருக்கும் பணி தீவிரம்
கோவையில் கேஸ் டேங்கர் கவிழ்ந்த பகுதியில் சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் போராட்டம் நடத்திய செளமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் மகளிரணியினர் பலர் கைது
சென்னை மாதவரத்தில் 14 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கும்பலிடம் 5 நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
புதுச்சேரியில் மண்டல அளவிலான அறியவில் கண்காட்சி போட்டிகள்; அரசுப்பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருச்சி - திண்டுக்கல் தண்டவாள பராமரிப்பு பணிகள்; வந்தே பாரத், தேஜஸ் ரயில் சேவைகளில் மாற்றம்
திருப்பூர் அருகே குடிபோதையில் நடந்த தகராறில் இளைஞர் கொலை: 5 பேரை கைது செய்த போலீசார்
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சாகசத்தின்போது இரண்டு பாராசூட்கள் மோதி விபத்து; படகுகள் மூலமாக கமாண்டோக்கள் மீட்பு
பிப்ரவரி 10ம் தேதி பெங்களூரில் விமான கண்காட்சி தொடக்கம்; பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை காலை முதல் சோதனை
சென்னை விமான நிலையத்தில் 3.5 ரூபாய் கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு
கேல் ரத்னா, அர்ஜுனா விருது பெறும் தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து
பா.ஜ.க. நிர்வாகி நியமன விவகாரம்; ஈரோட்டில் பா.ஜ.க. நிர்வாகிகள் மோதல்
கடும் பனிப்பொழிவு; கொடைக்கானலில் மீண்டும் உறைபனியால் மக்கள் அவதி
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு