PAK vs ENG 3rd Test:இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்..வித்தியாசமான சாதனை செய்த பாகிஸ்தான்!
முதல் இன்னிங்ஸில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையுயும் பயன்படுத்தாமல் மொத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஒரு இன்னிங்ஸை முடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையுயும் பயன்படுத்தாமல் மொத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஒரு இன்னிங்ஸை முடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 68.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிக பட்சமாக இங்கிலாந்து அணி வீரர் ஜாகி ஸ்மித் மட்டுமே 89 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் செய்த சாதனை:
இதனைத் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 324 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணியை விட தற்போது 57 ரன்கள் பாகிஸ்தான் அணி முன்னிலையில் இருக்கிறது. முன்னதாகஇந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய பாகிஸ்தான் அணி 142 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு அணியும் செய்யாத ஒரு நிகழ்வை செய்து வரலாற்று சாதனையை செய்திருக்கிறது.
அதாவது, இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி சார்பாக ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக அமீர் ஜமால் மட்டும்தான் இருந்தார். ஆனால் அவர் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. பாகிஸ்தான் அணி சார்பாக சஜித் கான் மற்றும் நோமன் அலி ஆகிய இருவரும் சேர்ந்து 48 ஓவர்கள் வீசினர்.
அவர்களை தவிர்த்து மற்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஜாஹித் முகமது மற்றும் ஆஹா சல்மான் ஆகியோர் 11 ஓவர்கள் வீசினார். இப்படி முதல் இன்னிங்ஸில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையுயும் பயன்படுத்தாமல் மொத்தமாக சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து ஒரு இன்னிங்ஸை முடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் நிகழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.