மேலும் அறிய

ODI World Cup Records: 48 ஆண்டுகளில் இதுதான் அதிவேக சதம்! உலகக்கோப்பையில் புதிய வரலாறு படைத்த மார்க்ரம்!

தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ராம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை இன்று (அக்டோபர்7) இலங்கை அணிக்கு எதிராக படைத்துள்ளார்.

ஐசிசி உலகக்கோப்பை தொடரின் 4 வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 7) டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி மோதியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ராம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு  மாபெரும் சாதனை செய்து முடித்துள்ளார். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்:

அதிரடி காட்டிய தொடக்க ஆட்டக்காரர்கள்:

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, தென் ஆப்பிரிக்க அணியின்  தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும்  கேப்டன் தெம்பா பவுமா  ஆகியோர் களமிறங்கினர். இதில் பவுமா 5 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

பின்னர், மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் மற்றும் குயின்டன் டி காக் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குயின்டன் டி காக் 84 பந்துகளிக் சதம் விளாசினார். அந்த வகையில், 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 100 ரன்கள் எடுத்தார்.

மறுபுறம் இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்தை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்த வான்டெர்டுசென் 110 பந்துகளில் 13 பவுண்டரிகள் விளாசினார். மேலும் 3 சிக்ஸர்களுடன் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சூறாவளியாய் சுழன்ற ஐடன் மார்க்ராம்:

அடுத்ததாக களம் கண்ட ஐடன் மார்க்ராம் ஒரு சூறாவளி போல் சுழன்று இலங்கை அணியின் பந்துவீச்சை கிழித்து தொங்கவிட்டார். அவர், 49 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தம் 54 பந்துகள் களத்தில் நின்ற அவர் 14 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 106 ரன்கள் எடுத்தார்.

அதிவேக சதம்:

அந்த வகையில் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை புரிந்தார்.  ஐசிசி உலகக்கோப்பை  கிரிக்கெட் வரலாற்றில் 48 ஆண்டுகளில் நடைபெற்ற 450 போட்டிகளில் இது தான் அதிவேக சதம் என்ற சாதனையை பெற்றுள்ளது. தற்போது ரசிகர்கள பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் (100) (1975-2023)

தரவரிசை

ஆட்டக்காரர்

மொத்த ரன்கள்

எதிர்ப்பு

பந்துகள்

(சதம் அடிக்க எடுத்துக்கொண்ட பந்துகள்)

தேதி

1

ஐடன் மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா)

106

இலங்கை

49

7 அக்டோபர் 2023

2

கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து)

113

இங்கிலாந்து

50

02 மார்ச் 2011

3

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)

102

இலங்கை

51

08 மார்ச் 2015

4

ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

162*

மேற்கிந்திய தீவுகள்

52

27 பிப்ரவரி 2015

5

இயோன் மோர்கன் (இங்கிலாந்து)

101

ஆப்கானிஸ்தான்

57

18 ஜூன் 2019

6

மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா)

111

தென்னாப்பிரிக்கா

66

24 மார்ச் 2007

7

ஜான் டேவிசன் (கனடா)

117*

மேற்கிந்திய தீவுகள்

67

23 பிப்ரவரி 2003

8

குமார் சங்கக்கார (இலங்கை)

117

இங்கிலாந்து

70

01 மார்ச் 2015

9

பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து)

101

நெதர்லாந்து

70

18 மார்ச் 2011

10

கபில் தேவ் (இந்தியா)

175

ஜிம்பாப்வே

72

18 ஜூன் 1983

11

ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)

149

இலங்கை

72

28 ஏப்ரல் 2007

12

குமார் சங்கக்கார (இலங்கை)

105

பங்களாதேஷ்

73

26 பிப்ரவரி 2015

13

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

103

பாகிஸ்தான்

75

03 ஜூன் 2019

14

பிரெண்டன் டெய்லர் (ஜிம்பாப்வே)

121

அயர்லாந்து

79

07 மார்ச் 2015

15

மஹேல ஜெயவர்தன (இலங்கை)

100

கனடா

80

20 பிப்ரவரி 2011

மேலும் படிக்க: ICC Cricket World Cup 2023: சாதனை மேல் சாதனை.. சிக்கிய இலங்கையை சிதைத்த தென் ஆப்ரிக்கா படைத்த வரலாற்று பட்டியல் இதோ..

மேலும் படிக்க: SL Vs SA WC 2023: டி காக், டு சென், மார்க்ரம் மிரட்டல் சதம்! பஞ்சரான இலங்கை பவுலிங்! 429 ரன்கள் டார்கெட்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
Embed widget