மேலும் அறிய

Joe Root: ஏ..எப்புட்றா? டெஸ்டில் அதிக ரன்கள்! சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!

டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் உலகில் இவர் படைத்த சாதனைகள் பலவும் இன்று முறியடிக்கப்படாமல் உள்ளது. இருந்தபோதிலும் அவரது சில சாதனைகளை ஜாம்பவான்களாக உருவெடுத்துள்ள விராட் கோலி, ஜோ ரூட் போன்ற வீரர்கள் முறியடித்துள்ளனர். இந்த சூழலில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் என்ற சச்சின் சாதனையை வித்தியாசமான முறையில் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்:

இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜோ ரூட் டக் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில் ரூட் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட் 18 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இதுவரை சச்சின் டெண்டுல்கர் தன் வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ஜோ ரூட் தற்போது தன்வசமாக்கியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்சில் ஆடி 1625 ரன்கள் எடுத்துள்ளார். ஜோ ரூட் தற்போது 1630 ரன்கள் எடுத்து தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் 4வது இன்னிங்சில் அதிக ரன்கள்:

  • ஜோ ரூட் – 1630 ரன்கள் – 49 இன்னிங்ஸ்
  • சச்சின் டெண்டுல்கர் – 1625 ரன்கள் – 60 இன்னிங்ஸ்
  • அலஸ்டயர் குக் – 1611 ரன்கள் -53 இன்னிங்ஸ்
  • கிரீம் ஸ்மித் – 1611 ரன்கள் – 41 இன்னிங்ஸ்
  • சந்தர்பால் – 1580 ரன்கள்- 49 இன்னிங்ஸ்
  • டிராவிட் – 1552 ரன்கள் – 56 இன்னிங்ஸ்

விராட் கோலி இந்த பட்டியலில் 31 இன்னிங்சில் ஆடி 1097 ரன்களுடன் 26வது இடத்தில் உள்ளார். ஜோ ரூட் இதுவரை 150 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 274 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். அதில் மொத்தம் 35 சதங்கள், 6 இரட்டை சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 777 ரன்கள் எடுத்துள்ளார். இதுதவிர 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 சதங்கள், 39 அரைசதங்களுடன் 6 ஆயிரத்த 522 ரன்கள் எடுத்துள்ளார். 32 டி20 போட்டிகளில் ஆடி 893 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்கள், 6 இரட்டை சதங்கள் மற்றும் 68 அரைசதங்களுடன் 15 ஆயிரத்து 921 ரன்கள் எடுத்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49 சதங்கள், 1 இரட்டை சதம், 96 அரைசதத்துடன் 18 ஆயிரத்து 426 ரன்கள் எடுத்துள்ளார்.  78 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதத்துடன் 2 ஆயிரத்து 334 ரன்கள் எடுத்துள்ளார்.  

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Embed widget