(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: மஜாபா மஜாபா.. வாத்தி ப்ளேயிங் கோல்ஃப்.. தல தோனியின் வைரல் வீடியோ..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வரை 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. முதலில் 1983ஆம் ஆண்டு கபில்தேவ் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றார். அதன்பின்னர் 2007 ஆம் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அடுத்து 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இந்தியாவிற்காக உலகக் கோப்பையை பெற்ற தந்த இந்த இரண்டு கேப்டன்களும் இணையும் போது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.
இந்நிலையில் இன்று கபில் தேவ் மற்றும் தோனி ஆகிய இருவரும் இணைந்து கோல்ஃப் விளையாடியுள்ளனர். அதில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோலஃப் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை இந்திய தொழில்முறை கோல்ஃப் சங்கமான பிஜிடிஐ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
View this post on Instagram
அந்த வீடியோவில் தோனி மாஸாக கோல்ஃப் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். ஹரியானா மாநிலத்திலுள்ள டிஎல்.எஃப் கோல்ஃப் மைதானத்தில் கபில்தேவ்-கிராண்ட் தோர்டன் கோல்ஃப் தொடர் நடைபெறுகிறது. இந்த காட்சி கோல்ஃப் போட்டியில் தோனி கலந்து கொண்டு கோல்ஃப் விளையாடியுள்ளார்.
ஏற்கெனவே இந்தாண்டு யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் போது தோனி மற்றும் கபில்தேவ் ஆகிய இருவரும் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியை இணைந்து பார்த்தனர். அந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலானது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இவர்கள் இணைந்து இருக்கும் படம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் களமிறங்கி வருகிறார். வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறும் சூழல் உள்ளது. இதனால் மீண்டும் தல தோனியை மஞ்சள் நிற ஜெர்ஸியில் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.