சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; அஸ்வினுக்கு சிறப்பு விருது – கவுரவித்த பிசிசிஐ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்துள்ளது. இந்த விருதினை பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா வழங்கினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 26 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
One of the finest all-rounders in international cricket with a career decorated with class, consistency and commitment! 👏👏
— BCCI (@BCCI) February 1, 2025
Congratulations to Ravichandran Ashwin for winning the BCCI Special Award 🏆#NamanAwards | @ashwinravi99 pic.twitter.com/QNHx4TAkdo
அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிசிசிஐ சிறப்பு விருதுடன் கேடயம் வழங்கப்பட்டது.
A historic moment 👏👏
— BCCI (@BCCI) February 1, 2025
The legendary Mr. Sachin Tendulkar receives the 𝗖𝗼𝗹. 𝗖.𝗞. 𝗡𝗮𝘆𝘂𝗱𝘂 𝗟𝗶𝗳𝗲𝘁𝗶𝗺𝗲 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗔𝘄𝗮𝗿𝗱 🏆 from ICC Chair Mr. Jay Shah 👌#NamanAwards | @sachin_rt | @JayShah pic.twitter.com/V7uwi7yjhN
இந்திய மகளிர் அணியின் தீப்தி ஷர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது பும்ராவுக்கும் சிறந்த அறிமுக வீரருக்கான விருது சர்ஃப்ராஸ் கானுக்கும் வழங்கப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

