IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து, இன்று 5வது டி20 போட்டி..!
IND Vs Eng 5th T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, ஐந்தாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

IND Vs Eng 5th T20: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி, மும்பை வான்கடேவில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து டி20 தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிந்த நிலையில், 3-1 என சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 14 ஆண்டுகளாக டி20 தொடரை கைப்பற்றவே இல்லை என்ற மோசமான சாதனை தொடர்கிறது. அதேநேரம், புனே போட்டியில் இந்திய அணி மாற்று வீரரை களமிறக்கியதில், ஐசிசி விதிகளை மீறியதாகவும் சர்ச்சை நிலவுகிறது. இந்நிலையில் தான், இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து 5வது டி20 போட்டி:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி, புனேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றியை பெற இங்கிலாந்தும், தொடரை வெற்றியுடன் முடிக்க இந்தியாவும் முனைப்பு காட்டுகிறது.
இந்தியாவின் பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு முக்கிய பலமாக கருதப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்த தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி போட்டியிலாவது அதிரடி காட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம் விளாசினார். எந்தவொரு வீரரும் இந்த தொடரில் தொடர்ச்சியாக ரன் சேர்க்காதது பெரும் பலவீனமாக கருதப்படுகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் எதிரணியை திணறடிக்கின்றனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள ஷமி இன்றைய போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வான்கடே மைதானம் எப்படி?
இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மைதானங்களில் வான்கடேவும் ஒன்று. இது பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக விளங்குகிறது. சிறிய பவுண்டரி எல்லைகள் காரணமாக, எப்படிப்பட்ட கடின இலக்கையும் இங்கு சேஸ் செய்ய வாய்ப்புள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். எனவே, பேட்ஸ்மேன்களின் வாண வேடிக்கையை காண, ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம், புதிய பந்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும்.
உத்தேச பிளேயிங் லெவன்
இந்தியா: சஞ்சு சாம்சன் (வி.கீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.
இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித் (வி.கீ), ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், அடில் ரஷித்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

