நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை துவங்கினார்.
மேலும் ’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் சினிமாவிலிருந்து விலகி முழு நேரம் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
இன்று தவெக-வின் இரண்டாவது ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி கொள்கைத்தலைவர்களின் சிலையை திறந்துவைத்தார் விஜய்.
முதலில் தமிழக வெற்றி(க்) கழகத்தின் பெயரில் ஒற்றுப்பிழை இருந்ததற்கு தமிழ் ஆர்வலர்களின் எதிர்ப்பும், மற்ற கட்சிகளின் விமர்சனமும் எழுந்தது.
அதை திருத்திக்கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்ள தயார் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உட்பட பல முக்கிய நிகழ்வுகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வந்தார்.
குறிப்பிட்ட நாளில் அரசியல் மாநாட்டை நடத்த முடியாததால் மற்ற அரசியல் கட்சியினர்களின் விமர்சனங்களுக்கு ஆளானார்.
பின் காவல்துறையினரின் கடும் கட்டுப்பாட்டுகளையும் மீறி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக-வின் முதன் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.
அப்போது அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக எனவும் அறிவித்தார்.
பின் கள அரசியலுக்கு விஜய் வரமாட்டார் என பிரதான அரசியல் கட்சிகள் விமர்சித்துக்கொண்டிருக்கும் வேளையில் விமான நிலையித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து தன் கள அரசியலை துவங்கினார்.
மேலும், திமுக ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு தவறையும் தவறாமல் சுட்டிக்காட்ட தொடங்கினார்.
வேங்கைவயலுக்கு நேரில் செல்லவும் விஜய் திட்டமிருந்ததாக கூறப்பட்டது.
கடும் விமர்சனங்களுக்கு நடுவிலும் நிலை தடுமாறாமல் தன் வேலைகளை செய்துகொண்டிருக்கிறார் தவெக கட்சியின் தலைவர் விஜய்.